முண்டாசு கவிஞன் பிறந்த தினம்! பாரதியின் வாழ்கை வரலாறு

தடைகளை மீறவும், விதிகளை உருவாக்கவும், இலக்கணங்களை உடைத்து புதிய இலக்கியங்களை படைக்கவும் வல்ல மகாகவியின் பிறந்தநாள் இன்று.
கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், விடுதலை வேட்கையைத் துண்டிய போராளி, இலக்கணங்களை உடைத்து புதுக்கவிதைக்கு பாதையிட்ட முன்னோடி, பாரதி.. இன்றும் மகாகவி என்ற போற்றுதலுக்குரிய பாரதியாரின் பாடல்கள், உயிர்ப்புடனும், துடிப்புடனும் எழுத வரும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டி.. தொலைநோக்கு சிந்தனை செய்வதற்கான துண்டுகோல்..
மொழிக்கு தொண்டு செய்து, நாட்டுக்கும் சேவை செய்த மகாகவிக்கு, அவரின் பிறந்தநாளில் தலைவணங்குவோம்..
கவிதை எழுதுபவர் கவிஞரல்ல; கவிதையை வாழ்க்கையாக உடையவர் மற்றும் வாழ்க்கையையே கவிதையாகப் படைப்பவரே கவிஞர் என கவிக்கு இலக்கணம் சொன்ன மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. வாருங்கள் பாரதியின் வரலாற்றை அலசுவோம்..
1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணியன், 7 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார்.
11 வயதில் எட்டயபுர சமஸ்தானத்தில் தன் புலமையை நிரூபித்த சுப்ரமணியனை, பாரதி என பட்டமளித்துப் பாராட்டினார் எட்டயபுர மன்னர். 1897 ஆம் ஆண்டு பதினான்கரை வயதான பாரதிக்கு 7 வயதான செல்லம்மாவுடன் திருமணம் நடைபெற்றது.
16 வயதில் தன் தந்தையை இழந்த பாரதி 1898 ஆம் ஆண்டு காசிக்குச் சென்றார். அங்கு ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்த அவர், யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழின் பெருமையை தரணிக்கு எடுத்துரைத்தார்.
பாரதி தனது பதினாறு வயது முதல் இருபது வயது வரை, காசியில் உள்ள தனது அத்தை வீட்டில் வாழ்ந்தார். அங்குள்ள பள்ளியில் படித்தார்.
பள்ளிக்கு காலையில் போனால் மாலையில் போகமாட்டார். ஒரு நாளும் புத்தகத்தை கையில் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் போனதேயில்லை. சட்டைப்பையில் சில கடிதங்களும், ஒரு பென்சிலும் வைத்திருப்பார். வாத்தியாரைப் பற்றி பாடல்கள் எழுதி, பக்கத்து பையன்களிடம் நீட்டுவார்.
பெரும்பாலும் கிண்டல்தான். பள்ளியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கல்லூரிப் படிப்புக்கு முன் படிக்க வேண்டி எப்.ஏ (F.A) வகுப்பில் சேர்ந்தார். அந்தப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். காசியில் இருந்த நான்கு ஆண்டுகளில் இந்தி மொழியில் நன்றாகத் தேறிவிட்டார்.
சூரத்தில்,1907, டிசம்பர் 26-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள, ஒரு நாள் முன்னதாகவே சூரத் சென்றடைந்தார் பாரதி. மாநாடு தொடங்கும் முன்பே, திலகரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று பாரதிக்கு ஆசை.
1907, டிசம்பர் 25-ம் தேதி சூரத்தில் கனமழை. மாநாட்டுக்கு வரும் பாதைகள் சேறும், சகதியுமாய் இருந்தன. பாதைகளை செப்பனிடும் பணியை திலகர் செய்கிறார் எனத் தெரிந்து, மழையில் நனைந்து கொண்டே சென்றார் பாரதியார்.
திலகரை அதற்கு முன் பார்த்ததில்லை. நூறு பேர்கள் வேலை செய்த இடத்தில் யார் திலகர் எனத்தெரியவில்லை. ஒருவர் மட்டும் குடையை பிடித்துக்கொண்டு எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.
அவர் பிடித்திருந்த குடையை தன் கைகளால் லேசாக தூக்கி விட்டு, குடை பிடித்திருந்தவரின் கண்களைப் பார்த்தார், சேறுஞ்சகதியும் கிடந்த அதே இடத்தில் உடனே அவரின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களை பாரதியார் எந்த அளவு மதித்தார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் 9 ஆம் வகுப்பு வரை படித்த பாரதியார், அப்போதே தமிழ் அறிஞ்சுகளோடும், பண்டிதர்களோடும் சொற் போரில் சுதந்திரமாக ஈடுபட்டார்.
அதனால் அவரின் தமிழ் புலமை மேலும் அதிகரித்தது. அன்றைய திருநெல்வேலி சீமையில் வசித்த பலர் இவரின் புலமையை கண்டு வியக்க துவங்கினர்.
பாரதியார் திருமண வாழ்க்கை
1897 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி பாரதி தம் வாழ்நாளில் மறக்க முடியாத தேதியாக மாறியது. 14 வயது மட்டுமே நிறைவடைந்த அவருக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாளோடு நடந்தேறியது பாலியல் திருமணம்.
இது போன்ற தவறுகள் இனி நடக்கவே கூடாது என்று அவர் அப்போது எண்ணினார் என்னவோ தெரியவில்லை. பின்னாளில் தன் கவிதைகள் மூலம் பாலியல் திருமணத்திற்கு எதிராக பொங்கி எழுந்தார் மகாகவி பாரதியார்.
16 வயதில் தன் தந்தையையும் இழந்த பாரதியார் அதன் பிறகு வறுமையில் வடித் தவித்தார். பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு காசிக்கு சென்று அலகாபாத் பல்கலை கழகத்தில் சம்ஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் கற்றறிந்தார்.
இது தவிர ஆங்கிலம், வங்காளம் போன்ற பிற மொழிகளிலும் தனிப் புலமை பெற்று விளங்கினார் பாரதியார்.
இத்தனை மொழிகளில் புலமை பெற்றதால் தான், “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தெளிவாக சொன்னார் மகா கவி பாரதியார். பாரதியார் செய்த பணி 4 ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு தமிழகம் திரும்பினார் பாரதியார்.
பிறகு எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞ்சராக பணியாற்றினார். அழகிய தமிழ் கவிதைகள் பலவற்றிற்கு சொந்தக்காரரான பாரதியாரின் எழுத்துக்கள் முதல் முதலில் 1903 ஆண்டு அச்சில் வந்தது.
அதன் பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார் பாரதியார். பிறகு சுதேயசிய மித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார். இந்திய விடுதைலை போராட்டத்தில் பாரதியார் ஆற்றிய பணி தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க 1905 ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார் மகாகவி பாரதியார்.
அதன் பிறகு கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ சிதம்பரம் பிள்ளை போன்றோரோடு நெருங்கிய தொடர்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர் நிவேதிக்கா தேவியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரிடம் ஆசி பெற்ற பாரதியார், அவரை தம் ஞயான குருவாக ஏற்றுக்கொண்டார்.
1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளி ஏறி பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்த உடன் கைது செய்யப்பட்டார் பாரதியார்.
34 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார் பாரதியார். விடுதலையானதும் தம் மனைவியின் ஊரான கடையம் என்னும் ஊரில் குடியேறினார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளையும் கடயத்திலேயே செலவிட்டார். 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம், தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதியார்.
அங்கு யாரும் எதிர்பாரா விதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எரிந்தது. அதனால் தலையிலும் கையிலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. அதோடு அவருக்கு இது ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. அதனால் அவர் நோய்வாய்ப்பட்டார்.
சில நாட்களுக்கு பிறகு அவர் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டபோதும் வயிற்று கடுப்பு நோயால் பாதிக்கப் பட்டார்.
மருந்துகளை சாப்பிட மறுத்த அவர் தனது 39 வது வயதில், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இவுலக வாழ்வை நீத்தார்.



