மீன ராசியினர் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்:
அசுவினி: முன்னேற்றமான நாள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.பரணி: உத்தியோகத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். உழைப்பாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்ப்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.ரோகிணி: வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். நினைத்த வேலை நடக்கும். வியாபாரி சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் லாபம் தோன்றும். விருப்பம் நிறைவேறும்.அதிகாரியின் சொல்படி நடப்பது நல்லது.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நேற்று தடைபட்ட முயற்சி இன்று நடக்கும். உங்களுக்கு நண்பர்கள் ஆதரவு தருவர். திருவாதிரை: தடைகளைத் தாண்டி நினைத்த வேலைகளை முடிப்பீர். உங்கள் திறமை வெளிப்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உங்கள் வேலைகளில் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள்.
கடகம்:
புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். பண வரவில் இருந்த தடை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.பூசம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். செயல் சாதகமாகும்.ஆயில்யம்: உங்களுக்கு பேச்சாற்றல் கை கொடுக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
சிம்மம்:
மகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: அரசியல்வாதிகளின் ஆலோசனைக்கு மதிப்பு உண்டாகும். உங்கள் மீது உண்டாகும் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம்.உத்திரம் 1: எந்த வகையிலும் குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். நினைத்தது நிறைவேறும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். முயற்சியில் சிறு தடை ஏற்படும்.அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். மனம்குழப்பமடையும். செயல்களில் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர். எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.சித்திரை 1,2: உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வதும், திட்டமிட்டுச் செயல்படுவதும் உங்கள் தேவைகளை நிறைவேற்றும்.
துலாம்:
சித்திரை 3,4: அதிர்ஷ்டமான நாள். உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். ஒருசிலர் உங்களை சந்திக்க காத்திருப்பர்.சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தின வேலைகளில் ஈடுபட்டி இருப்போருக்கு வருமானம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்.விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் எளிதாக பூர்த்தியாகும். நண்பர்களுடைய பேச்சினால் மனம் தெளிவடையும். உற்சாகம் உண்டாகும்.
விருச்சிகம்:
விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் உண்டான சிக்கல் தீரும். வரவு திருப்தி தரும். நெருக்கடி நீங்கும்.அனுஷம்: பிறரை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளரால் வியாபாரம் லாபம் தரும்.கேட்டை: நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
தனுசு:
மூலம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நேற்று வரை இருந்த குழப்பம் விலகும். கடந்த கால அனுபவத்தால் முயற்சியில் வெற்றி காண்பீர்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளைத் தடையின்றி முடிப்பீர்.உத்திராடம் 1: பிறருடைய விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். விருப்பத்திற்கு மாறாக உங்களுடன் இருப்பவர்கள் செயல்படுவர். குடும்பத்தில் குழப்பம் தோன்றி மறையும்.திருவோணம்: மனம் குழப்பமடையும். தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். தேவையற்றப் பிரச்னை தேடி வரும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை.
கும்பம்:
அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றமடையும் எதிர்பார்ப்பு நிறைவேறும்.சதயம்: உங்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டவர் மனம் மாறுவர். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் மனக்குழப்பம் நீங்கும்.பூரட்டாதி 1,2,3: கூட்டுத் தொழில் லாபமடையும். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும்.
மீனம்:
பூரட்டாதி 4: செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மறைமுக எதிரி விலகிச்செல்வர். விருப்பம் பூர்த்தியாகும்.உத்திரட்டாதி: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். சுறு சுறுப்புடன் செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நேற்றைய பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.
மேலும் ஆன்மீகம் தொடர்பான செய்திகளை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://www.lanka4.com/category/spirituality



