மிதுன ராசியினர் உழைப்பால் உயர்வு காணும் நாள் - ராசிபலன்
மேஷம்:
அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எண்ணியது நிறைவேறும். முயற்சி லாபமாகும். பழைய பிரச்னை மீண்டும் தோன்றும்.பரணி: வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.கார்த்திகை 1: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உடல்நிலை சீராகும். வழக்கில் வெற்றியுண்டாகும். செல்வாக்கு உயரும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு காண்பீர். எதிலும் கவனம் தேவை.ரோகிணி: பழைய செயல் ஒன்றில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி லாபம் தரும். உங்கள் திறமை வெளிப்படும்.மிருகசீரிடம் 1,2: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் முயற்சிக்கேற்ற லாபம் உண்டாகும். விருப்பம் நிறைவேறும்.திருவாதிரை: தொழில், வியாபாரத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. தாய்வழி உறவுகள் ஆதரவால் உங்கள் வேலை நடந்தேறும்.புனர்பூசம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
கடகம்:
புனர்பூசம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். சிறு வியாபாரிகளுக்கு இன்று லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடை விலகும். பூசம்: சிந்தித்து செயல்படுவதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள்.ஆயில்யம்: சகோதரர் உதவியால் முக்கிய வேலை நடந்தேறும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல் வெற்றியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
சிம்மம்:
மகம்: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்பூரம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். உங்கள் முயற்சி கடன் பிரச்னையை குறையும்.உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திரனும் கேதுவும் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் நிதானம் தேவை. அஸ்தம்: எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். எதிலும் துணிச்சலாக செயல்படுவீர்.சித்திரை 1,2: தொழிலில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் எண்ணம் நிறைவேறும். முயற்சிகள் வெற்றியாகும். பிறரின் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.
துலாம்:
சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சுவாதி: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செலவு செய்து நினைத்ததை சாதிப்பீர்.விசாகம் 1,2,3: எதிர்பாராத செலவும், மனக்கவலையும் ஏற்படும். அவசர வேலைகளில் நெருக்கடிக்கு ஆளாவீர். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மைதரும்.
விருச்சிகம்:
விசாகம் 4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உழைப்போரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முதலீடு மட்டும் வேண்டாம்.அனுஷம்: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர் அலுவலகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.கேட்டை: இழுபறியாக இருந்த வேலை எளிதாக முடியும். நண்பர்கள் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும். தேவை பூர்த்தியாகும் நாள்.
தனுசு:
மூலம்: கனவு நனவாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உங்கள் அணுகுமுறை நன்மையை உண்டு பண்ணும்.பூராடம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். மூன்றாமிட சனியால் முன்னேற்றம் உண்டாகும்.உத்திராடம் 1: பண நெருக்கடி நீங்கும். கடன்களை அடைப்பீர். ஜென்ம சூரியன் உங்களை வேகப்படுத்துவார். லாபத்தை அதிகரிப்பார்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். விஐபிகள் ஆதரவால் உங்கள் வேலை நடந்தேறும். எதிர்பார்ப்போடு மேற்கொண்ட முயற்சி லாபமாகும்.திருவோணம்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும்.நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் இன்று முடிவிற்கு வரும்.அவிட்டம் 1,2: எந்த வேலையாக இருந்தாலும் அதை யோசித்து செய்வது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியான வேலை முடியும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.சதயம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இயந்திரப் பணிகளில் இருப்பவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.பூரட்டாதி 1,2,3: இனம்புரியாத குழப்பம் தோன்றும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது. வாக்குவாதம் வேண்டாம்.
மீனம்:
பூரட்டாதி 4: உங்கள் செயல் வெற்றியாகும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.உத்திரட்டாதி: உடன் பணிபுவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் முயற்சி பலிதமாகும்.ரேவதி: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். விலகிச்சென்ற நண்பர்கள் உங்களைத் தேடி வருவர். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்.
மேலும் ஆன்மீகம் தொடர்பான செய்திகளை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்