துலா ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான ராசிபலன்
குடும்ப உறவுகளில் ஒத்துழைப்பும் புரிதலும் அதிகரிக்கக்கூடிய நேரம் இது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து, சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செயல்படுவதன் மூலம் அதிக நெருக்கம் ஏற்படும்.
வீடு தொடர்பான மாற்றங்கள் சிலருக்கு சாதகமாக இருக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடைகள் குறையும்.
தன வரவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். அடகு வைத்த நகைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பேச்சுக்களில் பொறுமையை கையாள்வது நல்லது.
அக்கம்பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்ற இறக்கமாக காணப்படும். இன்பச் சுற்றுலா செல்வது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும்.
எதிர்காலம் சார்ந்த புதிய திட்டங்களில் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. கடன் நிமித்தமான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுகமான திறமைகள் மூலம் பாராட்டுகளையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்குவீர்கள்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான மாற்றங்கள் வரக்கூடும். உடல் நலத்தில் இருந்த சின்னச் சின்ன பிரச்சனைகள் குறைந்து, புத்துணர்ச்சி கூடும்.
இனிப்பு உணவுகளைத் தவிர்த்து, சீரான மற்றும் கட்டுப்பாடான உணவுப் பழக்கங்களை கையாள்வது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது.
பெண்கள்
பெண்களுக்கு குடும்பத்தினருடன் நல்ல உறவுகளை பேணுவது முக்கியமாகும். விருந்து விழாக்களில் கலந்துகொள்வதன் மூலம் குடும்ப உறவுகள் பலப்படும். குடும்ப நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மையில் உங்கள் திறமைகள் மேலும் வளரும்.
எதிர்காலத் தேவைகளுக்காக பணம் சேமிப்பது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும்.
திருமணமான பெண்களுக்கு மனநிறைவு அளிக்கும் செய்திகள் வரக் கூடும். வீட்டு தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதன் மூலம் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
மாணவர்கள்
மாணவர்கள் படிப்பில் ஏற்பட்ட குழப்பங்கள் குறைந்து தெளிவுடன் செயல்படுவீர்கள். அன்றாட பாடங்களை சரியாகக் கவனித்து படிப்பது, சிறந்த மதிப்பெண்கள் பெற உதவும். வகுப்பறையில் தேவையற்ற உரையாடல்களைத் தவிர்ப்பதன் மூலம் படிப்பில் அதிக நேரம் செலவிடலாம்.
உயர்கல்வி தொடர்பான பொறுப்புகள் மற்றும் முக்கியத்துவம் அதிகரிக்கும். வெளிநாடுகளில் கல்வி தொடர்பான கனவுகள் சிலருக்கு நிறைவேறும் வாய்ப்பும் உள்ளது. புதிய மற்றும் நுட்பமான தலைப்புகளை எளிதாக புரிந்து கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த இடமாற்றம் இனி சாத்தியமாகும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும்.
தாமதமாகிய ஊதியம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத உதவிகளின் மூலம், சில மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும் படிப்படியாக குறையும்.
வியாபாரிகள்
வியாபாரத்தில் புதிய உழைப்பும், உற்சாகமும் வெளிப்படுத்தி முன்னேற்றப் பாதையை அமைப்பீர்கள். வியாபாரத்தில் போட்டியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். இதனால் வியாபார முன்னேற்றத்திற்கான தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இடமாற்றம் மற்றும் விரிவாக்கம் தொடர்பான புதிய எண்ணங்கள் உங்களை ஊக்குவிக்கும். புதிய முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனமாகவும் ஆராய்ந்து செயல்படுவது பயனளிக்கும்.
அரசின் நிதி மற்றும் ஊக்கங்கள் குறித்த உதவிகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். கூட்டணி நிறுவனங்களோடு அனுசரித்து செயல்படுவதால் குழப்பம் குறையும். விவசாயத் துறையில் அதிக உழைப்பும் தன்னம்பிக்கையும் வெற்றியை நோக்கி வழிகாட்டும்.
அரசியல்வாதிகள்
அரசியல் வாழ்க்கையில் புதிய உயர்வுகள் அடையும்படி கட்சியின் முக்கிய நபர்களிடமிருந்து அறிமுகம் மற்றும் ஆதரவு கிடைக்கும். இது உங்களின் அரசியல் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக அமையும்.
வழக்கு, சட்ட விவகாரங்களில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படக்கூடும், நல்ல ஆலோசனைகளை எடுத்துக்கொண்டு செயல்படுவது நல்லது.
தனவரவுகள் மற்றும் பொருளாதாரச் சூழலில் நேர்மையை கடைபிடிப்பது, மற்றவர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும்.
செய்யும் முயற்சிகளுக்கு சிறு சிறு தடைகளால் காலதாமதம் உண்டாகும். எதிலும் முன் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
வழிபாடுகள்
நடராஜ பெருமாளை வழிபட்டால், மனதில் உள்ள குழப்பங்கள் விலகி, வாழ்க்கையில் நன்மைகள் பெருகும். அவருடைய அருளைப் பெற உங்களுக்கு எதிராக இருந்த பிரச்சனைகள் நீங்கி நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
முடிவுரை
2025 ஆம் ஆண்டில் துலாம் ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
குடும்பத்தில் அமைதி மற்றும் புரிதல் அதிகரிக்கும். வியாபாரங்களில் புதுமையான வாய்ப்புகள் காணப்படும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சவால்கள் சற்று குறையும், பொறுப்புகளும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
2025ம் ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமைய Lanka4 ஊடகம் சார்பாக வாழ்த்துக்கள்.
மேலும் 12 ராசிகளுக்கான 2025ம் ஆண்டின் பலன்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்