மகர ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான ராசிபலன்
2025 ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும், தெளிவான சிந்தனை உருவாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். வீடு மற்றும் நிலத்தை உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றி அமைப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு தகுந்த முன்னேற்றமும் பலன்களும் கிடைக்கும். எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய மற்றும் வித்தியாசமான வாய்ப்புகள் உருவாகும்.
குடும்பத்தில் புதிய நபர்கள் சேருவதால் மகிழ்ச்சி நிறைந்த தருணங்கள் காணப்படும். பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடியான சூழ்நிலைகள் படிப்படியாக குறையும். தாய்மாமன் வழி உறவுகளுடன் அனுசரித்து நடப்பது நல்லது.
ஆரோக்கியம்
ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உடற்பயிற்சி செயல்களில் ஆர்வம் உண்டாகும். கொழுப்பு சார்ந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பெண்கள்
பெண்களுக்கு மனதளவில் இருந்த தயக்கங்கள் குறையும். பாகப்பிரிவினை விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் வைத்துள்ள எண்ணங்களை நிறைவேற்ற சந்தர்ப்பங்கள் உருவாகும். குழந்தைகளுடன் இருந்த வேறுபாடுகள் குறையும்.
செலவுகளை சரியாக கணித்து, திட்டமிட்டு செயல்பட வேண்டும். வாழ்க்கை துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஒத்துழைத்து நடப்பது நல்லது. அணிகலன் பொருட்களில் ஆர்வமும் ஆசையும் அதிகரிக்கும்.
மாணவர்கள்
மாணவர்கள் இந்த ஆண்டில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். கல்வியில் இருந்த மந்தத்தன்மை குறைந்து படிப்பில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். முதுகலை கல்வியில் கவனமுடன் செயல்படுவது முக்கியம்.
பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அரசால் வழங்கப்படும் சில உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உயர்கல்வி தொடர்பான உதவிகள் சிலருக்கு ஆதரவாக அமையும்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்றபடி அனுசரித்து செயல்பட வேண்டும். சக ஊழியர்களுடன் சில விஷயங்களை பகிர்வதற்கு முன்பு, அவர்களின் தன்மையை அறிந்து கொண்டு நடப்பது நல்லது.
உங்கள் மீதான நம்பிக்கையில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உருவாகலாம். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள், இதனால் பணி மேம்பட உதவும்.
உயர் அதிகாரிகளுடன் உள்ள கருத்து வேறுபாடுகள் குறைவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். வேலை மாற்றம் பற்றி யோசித்து முடிவெடுப்பது நல்லது.
வியாபாரிகள்
கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்றபடி கருத்துகளை பகிர்வதால் நன்மை கிடைக்கும். வேலையாட்களை ஊக்குவித்து செயல்படுத்துவது வியாபாரத்திற்கு சாதகமாக அமையும்.
வாகன உதிரிப்பாகங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். எதிரியாக இருந்தவர்கள் விலகுவர்கள். விவசாயத் துறையில் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நல்லது. சிறு தொழில்கள் மற்றும் குறுந்தொழில்களில் சாதகமான பலன்கள் பெறுவீர்கள்.
கலைஞர்கள்
கலை துறையில் புதிய திட்டங்களை செயல்படுத்தும் முன் ஆலோசனை பெற்று முடிவு செய்யவும். திறமைக்கான பாராட்டுக்கள் மற்றும் துறை சார்ந்த அனுபவம் கிடைக்கும். தோற்றத்தில் மாற்றங்கள் காணப்படும்.
ஆன்மிக பணிகளில் முன்னேற்றம் இருக்கும். குளிர்ச்சியான பொருட்களை கையாளும் போது கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த கடனுதவி காலதாமதமாக கிடைக்கும்.
அரசியல்வாதிகள்
புதிய தொழில்நுட்ப கருவிகள் ஆதாயமான சூழ்நிலைகளை உருவாக்கும். முயற்சிகளுக்கேற்ற முன்னேற்றம் மற்றும் உயர்வு கிடைக்கும். கட்சி பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகும். செயல்பாடுகளில் சில தடுமாற்றங்கள் ஏற்படக்கூடும், சிந்தனையில் கவனம் தேவை.
வழிபாடுகள்
சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணியரைக் மனமுருகி வேண்டினால் சொந்த வீடு கட்டும் வாய்ப்பு ஏற்படும். நினைத்த காரியங்களில் வெற்றி காணலாம்.
முடிவுரை
2025 ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்கள் நலவாழ்வு, பணியில் முன்னேற்றம், மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் பல சாதனைகளை அடையக்கூடும்.
தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டால் வாழ்க்கையின் பல துறைகளில் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியும் ஆன்மிக துறையில் செல்வாக்கும் வளரும்.
2025ம் ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமைய Lanka4 ஊடகம் சார்பாக வாழ்த்துக்கள்.
மேலும் 12 ராசிகளுக்கான 2025ம் ஆண்டின் பலன்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்