கன்னி ராசியினர் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்
மேஷம்:
அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய
நாள். உங்கள் வேலைகளில் சிறு சிறு தடைகள் உண்டாகும். பரணி: பணியிடத்தில்
எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச்
செல்வதால் நன்மை உண்டாகும்.கார்த்திகை 1: வியாபாரிகள் புதிய முதலீட்டில்
கவனமுடன் இருக்க வேண்டும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
ரிஷபம்:
கார்த்திகை
2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள்
செல்வாக்கு உயரும். ரோகிணி: எடுத்த வேலைகள் கடும் முயற்சிக்குப்பின்
நிறைவேறும். வியாபாரிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.
மிருகசீரிடம் 1,2: செலவிற்கேற்ற பணம் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால்
திட்டமிட்டிருந்த வேலைகள் முடியும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4:
முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். நிதிநிலை
உயரும்.திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வந்தாலும் பழைய பிரச்னைகள்
மீண்டும் தோன்றி உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். புனர்பூசம் 1,2,3:
உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். உங்கள் வேலைகளை இன்று பிறரிடம்
ஒப்படைக்க வேண்டாம்.
கடகம்:
புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள்.
தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு
அதிகரிக்கும். பூசம்: விழிப்புடன் செயல்படுவதால் வேண்டாத பிரச்னைகள்
விலகிப்போகும். உங்கள் அணுகுமுறையால் நினைத்ததை சாதிப்பீர். ஆயில்யம்:
நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் ஆதரவுடன் ஒரு வேலையை
முடிப்பீர்.
சிம்மம்:
மகம்: பெரியோரின் ஆதரவால் நினைத்ததை
சாதிக்கும் நாள். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர்.பூரம்:
பணியாளர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பிரச்னைகள் வாசல்
கதவைத்தட்டும் என்றாலும் நிலைமைகளை சமாளிப்பீர்கள்.உத்திரம் 1: கோயில்
வழிபாட்டில் பங்கேற்பீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.
கன்னி:
உத்திரம்
2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டிருந்த வேலைகள்
இழுபறியாகும். அஸ்தம்: உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும்.
சிரமங்கள் சூழும். வேலைபளு அதிகரிக்கும். சித்திரை 1,2: ஒவ்வொரு
முயற்சியிலும் கவனம் தேவை. பிறரை நம்பி இன்று எந்த வேலைகளையும் ஒப்படைக்க
வேண்டாம்.
துலாம்:
சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள்.
எதிர்பார்த்த தகவல் வரும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். சுவாதி: என்றோ
ஏற்பட்ட ஒரு பிரச்னை இன்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்றாலும் அதை
சமாளிப்பீர்கள். விசாகம் 1,2,3: புதிய பொருட்கள் வாங்குவீர். எதிர்பார்த்த
பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
விருச்சிகம்:
விசாகம்
4: நினைப்பது நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு
சாதகமாகும்.அனுஷம்: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர்.
உடல்நிலையும் மன நிலையும் சீராகும். கேட்டை: நினைத்ததை நிறைவேற்றிக்
கொள்வீர். வழக்கு விவகாரம் சாதகமாகும். வரவு அதிகரிக்கும்.
தனுசு:
மூலம்:
குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் நாள். உங்கள் வார்த்தைக்கு
மதிப்புண்டாகும். பூராடம்: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம்
உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். உத்திராடம் 1: நீண்ட
நாட்களாக நிறைவேறாமல் இருந்த வேலை இன்று நடந்தேறும். வியாபாரத்தில் லாபம்
அதிகரிக்கும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும்
நாள். தொழில் முன்னேற்றமடையும். வரவேண்டிய பணம் வரும். திருவோணம்: சில
வேலைகளில் போராடி வெற்றி காண்பீர். உழைப்பிற்கேற்ற வருவாய்
உண்டாகும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெளியூர்
பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
கும்பம்:
அவிட்டம் 3,4: யோகமான
நாள். முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட
தடைகள் விலகும்.சதயம்: எதிரிகள் கை ஓங்கும் என்றாலும் அனைத்தையும்
சமாளித்து வெற்றி அடைவீர். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.
பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஒப்புக்கொண்ட வேலையை முடித்துக் கொடுப்பீர்.
எதிர்பார்த்த பணம்வரும்.
மீனம்:
பூரட்டாதி 4: நன்மையான நாள்.
வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். நினைத்ததை சாதிப்பீர். உத்திரட்டாதி:
உடன் பணிபுரிபவருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பண விவகாரத்தில்
எச்சரிக்கைத் தேவை. ரேவதி: நினைத்தது நிறைவேறும். தடைபட்டிருந்த வருமானம்
வரும். புதிய பொருட்கள் சேரும்.
மேலும் ஆன்மீகம் தொடர்பான செய்திகளை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்