வரவால் வளம் காணும் கடக ராசியினர் - ராசிபலன்
மேஷம்:
அசுவினி: வேலைபளு அதிகரிக்கும்.
வெளியூர் பயணத்தில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். பரணி: சலனத்திற்கு
இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல்படுவதால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.
கார்த்திகை 1: குடும்பத்தில் சிறு பிரச்னை தோன்றும். பூர்வீக சொத்தில்
உறவினரால் சிக்கல் உண்டாகும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4:
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பிறரை அனுசரித்துச் செல்வது
அவசியம்.ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வெளியூர் பயணத்தில்
வேகம் தவிர்ப்பது நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: எந்தவொரு வேலையிலும் இன்று
அலட்சியம் வேண்டாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.
மிதுனம்:
மிருகசீரிடம்
3,4: நினைப்பது நடந்தேறும் நாள். முயற்சியில் வெற்றியடைவீர். தன்னம்பிக்கை
அதிகரிக்கும்.திருவாதிரை: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த
குழப்பம் விலகும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். புனர்பூசம் 1,2,3:
வழிபாட்டில் பங்கேற்பீர். சிறிய முதலீட்டிலும் லாபம் அதிகரிக்கும்.
உழைப்பாளரின் நிலை உயரும்.
கடகம்:
புனர்பூசம் 4: வரவால் வளம்
காணும் நாள். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வியாபாரம்
முன்னேற்றமடையும். பூசம்: பணியிடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். பொருளாதார
நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். ஆயில்யம்: நீண்டநாள் முயற்சி இன்று
வெற்றியாகும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
சிம்மம்:
மகம்:
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் கவனம் செலுத்துவது
அவசியம்.பூரம்: வரவு அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல்
நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.உத்திரம் 1: உங்கள் வேலைகளை இன்று
பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சூழ்நிலை அறிந்து முதலீடு செய்வது
நன்மையாகும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்பட
வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். அஸ்தம்: வரவு செலவில்
நிதானமுடன் செயல்படுவது அவசியம். வாகனம் செலவை ஏற்படுத்தும்.சித்திரை 1,2:
போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். கையிருப்பு கரையும். செயல்களில்
எச்சரிக்கை அவசியம்.
துலாம்:
சித்திரை 3,4: திட்டமிட்டு
செயல்படுவதால் வருமானம் கூடும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.
சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உறவினர் வழியில் ஏற்பட்ட
சங்கடங்கள் விலகும். விசாகம் 1,2,3: வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
நீண்டநாள் விருப்பங்கள் பூர்த்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.
விருச்சிகம்:
விசாகம்
4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
எதிர்பார்த்த லாபம் வரும். அனுஷம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். செய்து
வரும் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வரும். கேட்டை: நினைத்ததை நிறைவேற்றி
லாபம் காண்பீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
தனுசு:
மூலம்:
அனுகூலமான நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வழிபாட்டால் நலம்
காண்பீர்கள். பூராடம்: பெரியோரின் உதவி கிடைக்கும். உங்கள் வேலைகளில்
தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். உத்திராடம் 1: நேற்றுவரை இருந்த
நெருக்கடி விலகும். பண விவகாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
மகரம்:
உத்திராடம்
2,3,4: இன்று எதிர்பாராத சங்கடங்களுக்கு ஆளாகலாம் என்பதால் நிதானமாக
செயல்படுவது நன்மையாகும்.திருவோணம்: மனதில் இனம் புரியாத குழப்பம்
ஏற்படும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.அவிட்டம் 1,2:
பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி
அதிகரிக்கும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள்.
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடம் சரண் அடைவர். சதயம்:
போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு
உயரும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய
வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும்.
மீனம்:
பூரட்டாதி 4:
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட
சங்கடங்கள் விலகும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும்.
தடைபட்டிருந்த வேலையை மீண்டும் தொடர்வீர். ரேவதி: நீண்ட நாட்களாக
இருந்துவரும் பிரச்னைக்கு முடிவு காண்பீர். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி
விலகும்.
மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்