தனுசு ராசிக்காரர்களுக்கு நினைப்பது நடந்தேறும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 hours ago
தனுசு ராசிக்காரர்களுக்கு நினைப்பது நடந்தேறும் நாள் - ராசிபலன்

மேஷம்:
அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். விஐபிகள் உதவியால் உங்கள் செல்வாக்கு உயரும். பரணி: நீங்கள் எடுக்கும் முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயத்தை காண்பீர். பணியிடப் பிரச்னை தீரும். கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சிலர் கோயிலுக்கு செல்வீர்கள்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.ரோகிணி: தாய்வழி உறவுகள் ஆதரவால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரிவடையும். மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். பண நெருக்கடி விலகும்.

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேறும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த வரவு வரும். திருவாதிரை: திடீர் வரவால் நெருக்கடிகள் நீங்கும். பிறரை அனுசரித்துச் செல்வதால் நன்மையுண்டாகும்.புனர்பூசம் 1,2,3: உறவுகள் உங்களிடம் உதவிகேட்டு வருவர். செல்வாக்கு உயரும். தொழில் முன்னேற்றம் அடையும்.

கடகம்:
புனர்பூசம் 4: வாய்ப்புகளைப் பயன்படுத்தி முயற்சியில் வெற்றி அடைவீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். ஆயில்யம்: வியாபாரத்தில் உங்களது முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

சிம்மம்:
மகம்: விருப்பங்கள் நிறைவேறும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். பூரம்: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திரம் 1: வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் உண்டான நெருக்கடி நீங்கும்.

கன்னி:
உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். செலவின் வழியே உங்கள் எண்ணம் நிறைவேறும். அஸ்தம்: உங்கள் வேலைகளில் தடை ஏற்படும். பிறரது வேலைகளில் தலையிடாமல் இருப்பது நன்மையாகும்.சித்திரை 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். முடியாது என்று மற்றவர்கள் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர்.

துலாம்:
சித்திரை 3,4: செயல்களால் செல்வாக்கு பெறும் நாள். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்பர். சுவாதி: வருமானத்தில் இருந்த தடை விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை முடியும். விசாகம் 1,2,3: நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

விருச்சிகம் :
விசாகம் 4: தடைகளைத் தாண்டி வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.அனுஷம்: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசிக்கவும்.கேட்டை: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பிறரால் முடிக்க முடியாத வேலையை சாதாரணமாக முடிப்பீர்கள்.

தனுசு:
மூலம்: நினைப்பது நடந்தேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூராடம்: திட்டமிட்டு செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.உத்திராடம் 1: உழைப்பால் உயர்வு காண்பீர். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். பெரிய மனிதர்கள் சந்திப்பு நிகழும்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். திருவோணம்: செயல்களில் சங்கடம் தோன்றும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். அவிட்டம் 1,2: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். மருத்துவச்செலவு ஏற்படும்.

கும்பம்:
அவிட்டம் 3,4: வருமானம் அதிகரிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். சதயம்: உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச்சென்று ஆதாயமடைவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மைதரும்.

மீனம்:
பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல்நிலை சீராகும்.உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிக்கேற்ற வருமானம் வரும். பொருளாதார நிலை உயரும்.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!