வீட்டில் மீன் தொட்டி வைத்து மீன் வளர்ப்பதால் உள்ள நன்மைகள்!
வீடுகளில் வாஸ்து சாஸ்திரத்தின் படி பல பொருட்களை வாங்கி வைப்பதுண்டு. அந்தவகையில் பலருக்கும் மீன் வளர்ப்பு என்பது பிடித்தமான விடயமாக காணப்படுகிறது.
குறிப்பாக மீன் வளர்ப்பதால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆகவே பெரும்பாலானவர்கள் மீன் வளர்ப்பதை தங்களுடைய பொழுதுபோக்காகவும் மேற்கொண்டு வருகிறார்கள்.
எவ்வாறாயினும் மீன்களை வளர்ப்பவர்கள் அவற்றை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் வீட்டில் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து, வீட்டில் வறுமையை அதிகரிக்கும்.
மீன்வளர்ப்பதால் நன்மைகளை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நன்மை (01) #LANKA4
வீட்டில் எப்போதும் மீன் தொட்டியை சமையலறையில் அல்லது படுக்கை அறையில் வைத்திருக்கக்கூடாது. இதனால் வீட்டில் பண இழப்பு ஏற்படும்.
நன்மை (02) #LANKA4
வீட்டில் மீன் தொட்டியை கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் வைப்பதே மிகவும் சிறந்தது. வாஸ்துவின் படி, இப்படி வைப்பதால், குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும்.நன்மை (03) #LANKA4
ஃபெங் சூயி படி, மீன் தொட்டியில் குறைந்தது 9 மீன்கள் இருக்க வேண்டும். அதிகப்பட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.
மீன் தொட்டியில் உள்ள மீன்களின் நிறமும் முக்கியமானது. அதில் 8 மீன்கள் சிவப்பு, ஆரஞ்சு அல்லது கோல்டன் நிறங்களிலும், ஒரு மீன் கண்டிப்பாக கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.
நன்மை (05) #LANKA4
மீன் தொட்டியில் கருப்பு மீன் இருந்தால், அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலும் உறிஞ்சிவிடும். ஒருவேளை அந்த கருப்பு மீன் இறந்துவிட்டால், அது வீட்டில் உள்ள அனைத்து கெட்ட சக்திகளையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம்.
நன்மை (06) #LANKA4
வீட்டினுள் நுழையும் போது, மீன் தொட்டி எப்போதும் இடது பக்கத்தில் இருப்பதே நல்லது.
நன்மை (07) #LANKA4
நன்கு ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக மற்றும் சுட்டித்தனமாக இருக்கும் மீன்களை தொட்டியில் வளர்த்தால், அது வீட்டினுள் செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
நன்மை (08) #LANKA4
மீன் தொட்டியை வீட்டின் தென்கிழக்கு பகுதியில் வைத்தால், அது அளவுக்கு அதிகமாக கண்டதை பற்றி சிந்திப்பதைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.
நன்மை (09) #LANKA4
ஒருவேளை மீன் இறந்துவிட்டால், அதை நீக்கிவிட்டு, அதே நிறத்தில் மற்றொரு மீனை தவறாமல் வாங்கிப் போடுங்கள்.
நன்மை (10) #LANKA4
மீன் தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்து, சுகாதாரமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.