2025ம் ஆண்டு ரிஷப ராசியினருக்கான சனி பெயர்ச்சி பொதுப்பலன்

#Astrology #Rasipalan
Prasu
2 hours ago
2025ம் ஆண்டு ரிஷப ராசியினருக்கான சனி பெயர்ச்சி பொதுப்பலன்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த  சனிப்பெயர்ச்சி உங்கள்  ராசியிலிருந்து 11ஆம் வீட்டில் நிகழும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நிகழும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருக்கிறார்.

இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை அளிக்கலாம். என்றாலும் நீங்கள் விரும்பியதை அடைய  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். லாப ஸ்தானத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் உங்கள் ஆசைகள் மற்றும் நோக்கங்களை நீங்கள் சரியான முறையில் செலுத்துவதன் மூலம் வெற்றி காணலாம்.

உங்களுக்கு வாய்ப்புகள் கிட்டலாம். என்றாலும் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். 

தாழ்வு மனப்பான்மை மற்றும் ஈகோவைத் தவிருங்கள். உங்கள் சூழ்நிலை உங்கள் வெற்றிக்கு அனுகூலமாக இருக்கும். நன்றி உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். சுய நலமாக செயல்படாதீர்கள்.


உத்தியோகம் :
உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் ஆர்வமுடன், ஈடுபாட்டுடன்  பணியாற்றுவீர்கள். பணியிடத்தில் பணிகள் மலை போல குவியலாம். என்றாலும் நீங்கள் சிறப்பாக செயலாற்றி அங்கீகாரம் பெறுவீர்கள். 

பணியிடத்தில் உங்களுக்கு வாய்ப்புகள் கிட்டலாம். அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


உங்கள் முன்னேற்றப் பாதையில் நீங்கள் சில தடைகளையும் சவால்களையும்  சந்திக்க வேண்டியிருக்கும். சவால்களும் தடைகளும் உங்களை மேம்படுத்தும். 

இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிட்டலாம். உத்தியோகத்தில் நல்ல எதிர்காலம் இருக்கலாம். தற்காலிக தடைகளை கடின உழைப்பின் மூலம் தகர்த்தால் வெற்றி உங்களை நாடி வரும்.


காதல் / குடும்ப உறவு :
உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். இதனால் நட்பு வட்டம் விரிவடையலாம். 

ரிஷப ராசி அன்பர்கள் சிலரின் மனதில் காதல் அரும்பு மலரலாம். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு தக்க துணை கிடைக்கப் பெற்று கெட்டி மேளம் கொட்டலாம்.


உங்கள் மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு கிட்டும் என்றாலும் உங்கள் பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.அவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலமும் வெளிப்படையான தகவல் தொடர்பு கொள்வதன்  மூலமும் உறவு வலுப்படும்.

திருமண வாழ்க்கை :
திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு  திருமணம் நடக்க இந்த காலக்கட்டம் ஏதுவாக இருக்கும். கணவன் மனைவி உறவும் சிறப்பாக இருக்கும். என்றாலும் சில சமயங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேடுபாகள் இருக்கலாம். இதனைத் தவிர்க்க புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வது அவசியம்.


விட்டுக் கொடுத்து அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் இணக்கமான உறவை உருவாக்கிக் கொள்ளலாம். 

கருத்து வேறுபாடுகள் தற்காலிக மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்றாலும் உறவு வலுப்பட நீங்கள் உங்கள் துணையுடன் அன்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்ள வேண்டும். உங்களின் இந்த அணுகுமுறை உறவை மேம்படுத்தி நிறைவை அளிக்கும்.


மாணவர்கள் :
மாணவர்கள் கல்வியில் வெற்றி காண விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். மனதை ஓருமுகப்படுத்தி கவனத்தை சிதறவிடாமல் படிக்க வேண்டும். 

உங்கள் சூழல் படிப்பில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் உங்கள் இலக்குகளை அடையலாம்.

ஒரு சில மாணவர்கள்  தாங்கள் எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்கப் பெறுவார்கள். வெளி நாடு சென்று கல்வி பயில வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் ஈடேறக் காண்பார்கள். தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வார்கள்.

போட்டித் தேர்வு எழுதுபவர்கள் தங்கள் முயற்சிகளில்  வெற்றி காண மனதை ஒருமுகப்படுத்தி  கவனம் சிதறாமல் செயல்பட வேண்டும். மொத்தத்தில் இந்த பெயர்ச்சிக் காலத்தில் மாணவர்களுக்கு விடா முயற்சியும் அர்ப்பணிப்பு உணர்வும் அவசியம்.

ஆரோக்கியம் :
அதிக பணிகள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே முறையான ஓய்வை மேற்கொள்வது அவசியம். மேலும் சிறந்த ஆரோக்கியத்தை தக்க வைக்க உடற்பயிற்சி மேற்கொள்வது  நல்லது. நடைப்பயிற்சி, மிதிவண்டி, நீச்சல் அல்லது நடனப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பழங்கள், காய்கறிகள், மற்றும் சிறு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை தவிர்த்து விடுங்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிருங்கள்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்காக உங்கள் உணவில் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். 

மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் யோகா அல்லது தியானம் போன்ற செயல்களை மேற்கொள்ளுங்கள்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!