கடக ராசியினர் கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 days ago
கடக ராசியினர் கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள் - ராசிபலன்

மேஷம்:
அசுவினி: நன்மையான நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வரவு அதிகரிக்கும். பரணி: உறவினர்கள் உங்களைத்தேடி வருவர். இழுபறியாக இருந்த பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும்.கார்த்திகை 1: உங்கள் செயல் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். சூரியனால் அரசு வழி முயற்சி சாதகமாகும்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வேலை பளு அதிகரிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும். வரவு இழுபறியாகும். ரோகிணி: உங்கள் வேலையை திட்டமிட்டபடி சரியாக செய்து முடிப்பீர். எதிர்பார்ப்பு முயற்சிக்குப் பின் நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். சிரமம் நீங்கும். தாய்வழி உறவு உதவி கிடைக்கும்.

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முயற்சி லாபமாகும் நாள்.நேற்று தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.திருவாதிரை: மனச் சங்கடம் தீரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர். மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு வேலையை செய்து முடிப்பீர். வருமானம் திருப்தி தரும்.

கடகம்:
புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும்.பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.ஆயில்யம்: உங்கள் செயலில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்:
மகம்: நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். தெளிவுடன் செயல்படுவீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.பூரம்: மனக்குழப்பம் விலகும். செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும். விருப்பம் நிறைவேறும்.உத்திரம் 1: உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருவாய் அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் கூடும்.

கன்னி:
உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திடீரென்று வெளியூர் பயணம் ஏற்படும். செலவு அதிகரிக்கும். உடலில் அசதி தோன்றும்.அஸ்தம்: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். உறவுகளுடன் சங்கடம் உண்டாகும்.சித்திரை 1,2: பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடு செய்வதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும்.

துலாம்:
சித்திரை 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்.சுவாதி: நண்பர்கள் துணையுடன் சில வேலைகளை நடத்தி முடிப்பீர். வீண் பேச்சிற்கு இடமளிக்க வேண்டாம்.விசாகம் 1,2,3: உங்கள் வேலைகளில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

விருச்சிகம்:
விசாகம் 4: வருவாயால் வளம் காணும் நாள். தொழிலில் இருந்த தடை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.அனுஷம்: திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை நீக்குவீர். உங்கள் விருப்பம் நிறைவேறும்.கேட்டை: நேற்று இழுபறியாக இருந்த ஒரு வேலை இன்று நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

தனுசு:
மூலம்: முன்னேற்றமான நாள். கடந்தகால அனுபவத்தைக் கொண்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.பூராடம்: தந்தைவழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடம் தீரும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அரசுவழி வேலை லாபம் தரும்.உத்திராடம் 1: மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயலில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள்.வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.திருவோணம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் செயல்கள் இழுபறியாகும் நாள்அவிட்டம் 1,2: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

கும்பம்:
அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வரவு செலவில் கவனம் தேவை. முதலீட்டில் எச்சரிக்கை அவசியம்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மீனம்:
பூரட்டாதி 4: வழக்கு வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்ப நெருக்கடி நீங்கும்.உத்திரட்டாதி: உடல்நிலை சீராகும். தைரியமாக செயல்படுவீர். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.ரேவதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த வேலையை நடத்தி முடிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!