கிளிநொச்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவ முகாம்

இன்றைய தினம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரோக்கியமான பெண்கள் வலிமையான சமூகம் எனும் தொணிபொருளில் அசெட்லைன் நிதி நிறுவனத்தினுடைய நிதி அனுசரணையுடன் கிளிநொச்சி நியூ செஞ்சரி லயன்ஸ் கலகத்தினுடைய ஏற்பாட்டில் கிளிநோச்சி உருத்திரபுரம் பிரதேசத்திலே மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. lanka4.com
இந்த மருத்துவ முகாம் செயற்பாட்டில் கிளிநொச்சி சிட்டி லயன்ஸ் கழகமும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவ முகாமிலே தொற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளும் மருத்துவ ஆலோசனைகளும் அதேவேளை உளநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. lanka4.com
குறிப்பாக உடனுக்குடன் இங்கே இருக்கக்கூடிய அவசரகால மருத்துவ தேவைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளும் மருந்து பொருட்களும் வழங்கப்பட்ட அதே வேளை பெருமளவான மக்கள் இந்த மருத்துவ முகாமிலே பலனடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. lanka4.com
உருத்திரபுரம் பிரதேசத்தில் இருக்கக்கூடிய மக்கள் பெருமளவில் இந்த மருத்துவ முகாமில் பங்குபற்றியிருந்தனர். lanka4.com
உண்மையிலேயே கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து மிக தொலைவில் அமைந்திருக்க கூடிய கிராமமாக உருத்திரபுரம் காணப்படுவதால் அங்கு காணப்படும் மருத்துவ இடர்பாடுகளை தீர்ப்பதற்கு இந்த முகாம் பெருமளவில் உதவியாய் அமைந்திருந்தது. lanka4.com
கிளிநொச்சி நியூ செஞ்சரி லயன்ஸ் கழகமானது கிளிநொச்சியில் பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகின்ற நிலையில் இந்த மருத்துவ முகாம் உண்மையிலேயே மிகவும் பெருமதிமிக்க ஒரு விஷயமாகவும் பலன் தரக்கூடிய ஒரு விஷயமாகவும் அந்த மக்களுக்கு மிகவும் பெருமதியான ஒரு விஷயமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. lanka4.com
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



