நெய்யை சுடுநீரில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

அனைவருக்குமே உணவில் நெய் சேர்த்து சாப்பிட பிடிக்கும். இந்த நெய் வெறும் உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிப்பது மட்டுமின்றி, உடலுக்கு ஏராளமான நன்மைகளையும் அளிக்கிறது. அதுவும் நெய்யை வெறுமனே உணவில் சேர்த்து சாப்பிடுவதை விட சுடுநீரில் கலந்து குடித்தால் இன்னும் நல்லது.
நெய்யில் DHA மற்றும் CLA போன்ற ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் உடலில் பல மாயங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இவை செரிமான செயல்முறை மேம்படுத்துவதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கீழே காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீரில் 1 ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. செரிமான ஆரோக்கியம் மேம்படும்
ஆயுர்வேதத்தின் படி, நெய் உடலில் செரிமானத் தீயை தூண்டிவிட்டு, உணவுகள் சீராக செரிமானமாக உதவுகிறது. மேலும் நெய் குடலின் சுவற்றில் ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, செரிமான செயல்முறை மென்மையாக நடைபெற உதவுகிறது மற்றும் அசிடிட்டி, வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படுவதைத் தடுக்கிறது. சுடுநீர் செரிமான பாதையை மென்மையாக்க உதவி புரிந்து, குடலியக்கம் சீராக நடைபெற ஊக்குவிக்கிறது.
2. மலச்சிக்கல் நீங்கும்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீரில் நெய் கலந்து குடித்து வந்தால், அதில் உள்ள மலமிளக்கும் பண்புகளால் குடலில் உள்ள நச்சுக்கள் சிரமமின்றி வெளியேற்றப்படும். இப்படி உடலில் இருந்து கழிவுகள் முறையாக வெளியேறினால் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள், உடல் சோர்வு மற்றும் மந்தநிலை போன்றவை தடுக்கப்படும்.
3. எடை இழப்புக்கு உதவும்
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், காலையில் எழுந்ததும் சுடுநீரில் நெய் கலந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, வயிற்றைச் சுற்றியுள்ள விடாப்பிடியான கொழுப்புக்கள் கரைந்து வெளியேறும் மற்றும் உடல் எடையும் குறையும். அதோடு இது பசி ஏற்படாமல் தடுக்கும் மற்றும் உணவுகளின் மீதான அதிகப்படியான நாட்டத்தைக் குறைக்கும். மேலும் நெய்யில் உள்ள கொழுப்பு அமிலம் உடலில் ஆற்றலுக்காக பயன்படுத்தப்பட்டு, உடலில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும். ஆயினும் நெய்யை அளவாக உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. சருமத்திற்கு நல்லது
நெய்யில் உள்ள மாய்ஸ்சுரைசிங் பண்புகள் சருமத்தை நீரேடற்றத்துடனும், உடலினுள்ளே பொலிவாக இருக்கவும் உவுகிறது. அதுவும் இதில் உள்ள கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு இயற்கை பொலிவை அளிக்கிறது. அதோடு நெய்யில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், செல்களை மீண்டும் உருவாக்கவும், சருமத்தில் தோன்றும் முதுமைக்கான அறிகுறிகளைத் தடுக்கும். எனவே சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க சுடுநீரில் நெய் சேர்த்து குடியுங்கள்.
5. மூளை ஆரோக்கியம் மேம்படும்
நெய் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இது அறிவாற்றல் செயல்பாடு, நினைவாற்றல் மற்றும் செறிவு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. அதுவும் சுடுநீரில் நெய் கலந்து குடிக்கும் போது, நீண்ட ஆற்றல் கிடைக்கிறது. மாணவர்கள் நெய்யை தவறாமல் உட்கொண்டு வந்தால், அது குழந்தைகள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு, கற்றல் திறன் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும்.
6. மூட்டுகளுக்கு நல்லது
மூட்டு வலியால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் காலையில் சுடுநீரில் நெய் கலந்து குடியுங்கள். இதனால் நெய் மூட்டுகளை நன்கு உயவூட்டவும், நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், மூட்டு விறைப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின்கே2 உள்ளது, இது எலும்புகளில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது.
7. இனப்பெருக்கத்திற்கு நல்லது
நெய்யானது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் போன்ற நல்ல ஹார்மோர்களின் உற்பத்தியை ஆதரிக்கிறது. மேலும் மாதடாய் சுழற்சியை சீராக்குகிறது மற்றும் PMS அறிகுறிகள குறைக்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்று பிடிப்புகள், வயிற்று உப்புசம் போன்ற மாதவிடாய் கால அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



