வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மே 19 (May 19)
#people
#history
#Lanka4
#World
Prasu
2 hours ago

கிரிகோரியன் ஆண்டின் 139 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 140 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 226 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
- 1268 – பைபார்களின் முற்றுகையை அடுத்து அந்தியோக்கியா வீழ்ந்தது.
- 1499 – அராகனின் 13-வயது கேத்தரினுக்கும், வேல்சு இலவரசர் 12 அவ்யது ஆர்தருக்கும் திருமணம் நடைபெற்ரது.
- 1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.
- 1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி ஆன் பொலின் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டாள்;
- 1542 – புரோம் இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மரில்) வீழ்ந்தது.
- 1568 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணி ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியைக் கைது செய்ய உத்தவிட்டார்.
- 1649 – இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.
- 1655 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: ஜமேக்கா மீதான முற்றுகை ஆரம்பமானது.
- 1743 – சான்-பியேர் கிறிஸ்தீன் செல்சியசு வெப்பநிலை அலகைக் கண்டுபிடித்தார்.
- 1780 – நியூ இங்கிலாந்து, மற்றும் கனடாவின் சில பகுதிகளில் அசாதாரணமான இருட்டு பகல் நேரத்தில் அவதானிக்கப்பட்டது.
- 1802 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் செவாலியே விருதை அறிமுகப்படுத்தினார்.
- 1828 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் குவின்சி ஆடம்ஸ் கம்பளி உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தீர்வை சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
- 1834 – இலங்கையில் பாடசாலைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.[1]
- 1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.
- 1919 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் அனத்தோலியக் கருங்கடல் கரையில் தரையிறங்கினார். துருக்கிய விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
- 1934 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கீமோன் ஜோர்ஜியெவ் பிரதமராகப் பதவியேற்றார்.
- 1950 – இசுரேலியக் கப்பல்களுக்கும் வணிகத்திற்கும் சுயஸ் கால்வாய் மூடப்படும் என எகிப்து அறிவித்தது.
- 1950 – பாக்கித்தானுக்குக் கொண்டு செல்லப்படவிருந்த வெடிகுண்டுகள் அடங்கிய படகு அமெரிக்காவின் தெற்கு அம்போய் துறைமுகத்தில் வெடித்ததில் நகரம் பெரும் சேதத்துக்குள்ளாகியது.
- 1961 – சோவியத்தின் வெனேரா 1 வெள்ளிக் கோளைக் கடந்தது. பூமியை விட வேறொரு கோளைக் கடந்த முதலாவது விண்ணூர்தி இதுவாகும்.
- 1961 – அசாம் மாநிலத்தில் சில்சார் தொடருந்து நிலையத்தில், வங்காள மொழி இயக்கத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
- 1971 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.
- 1978 – விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
- 1991 – குரோவாசியர்கள் தமது விடுதலைக்காக பொது வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.
- 2012 – சிரியாவில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
- 2016 – எகிப்திய வானூர்தி பாரிசில் இருந்து கெய்ரோ செல்லும் வழியில் நடுநிலக் கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 66 பேரும் உயிரிழந்தனர்.
- 2018 – வேல்சு இளவரசர் ஹாரி, ரேச்சல் மேகன் மெர்கல் ஆகியோரின் திருமணம் வின்சர் மாளிகையில் இடம்பெற்றது.
பிறப்புகள்
- 701 – லி பை, சீனக் கவிஞர் (இ. 762)
- 1762 – யோஃகான் ஃவிக்டெ, செருமானிய மெய்யியலாளர் (இ. 1814)
- 1824 – நானா சாகிப், இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் (இ. 1857)
- 1858 – ச. வே. இராமன் பிள்ளை, மலையாள எழுத்தாளர் (இ. 1922)
- 1881 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க், துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (இ. 1938)
- 1890 – ஹோ சி மின், வியட்நாமின் 1வது அரசுத்தலைவர் (இ. 1969)
- 1910 – நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (இ. 1949)
- 1912 – கிருஷ்ண குமாரசிங் பவசிங், இந்திய அரசியல்வாதி (இ. 1965)
- 1913 – நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1996)
- 1914 – கே. டி. கே. தங்கமணி, இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடி, அரசியல்வாதி (இ. 2001)
- 1925 – போல் போட், கம்போடியாவின் 29வது பிரதமர், இராணுவத் தலைவர் (இ. 1998)
- 1925 – மல்கம் எக்ஸ், அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1965)
- 1933 – எட்வர்ட் டி போனோ, மால்ட்டா மருத்துவர், நூலாசிரியர்
- 1934 – பி. லீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2005)
- 1934 – ரஸ்கின் பாண்ட், இந்திய எழுத்தாளர், கவிஞர்
- 1938 – கிரிஷ் கர்னாட், கன்னட நடிகர், எழுத்தாளர் (இ. 2019)
- 1964 – முரளி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2010)
- 1984 – தேச. மங்கையர்க்கரசி, தமிழக இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



