நவகமுவ துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞர் கைது!
கடுவெல பகுதியில் உள்ள நவகமுவ, கொரடோட்டா, மெனிககர வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் நேற்று (18) களனியின் கொஹோல்வில பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிதாரிகள் சம்பவ இடத்திற்கு வர பயன்படுத்திய வேனின் சாரதியாக சந்தேக நபர் செயல்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களனி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு வாடகை வீட்டிற்குள் இருந்த மூன்று பேர் குறிவைக்கப்பட்டதாகவும், சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்