ஐரோப்பிய நாடொன்றில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து - 21 பேர் பலி!
#SriLanka
#Accident
#Spain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
தெற்கு ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோர்டோபா மாகாணத்தில் உள்ள அடமுஸ் அருகே நேற்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேற்படி விபத்தில் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 18 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக பயணித்த ரயில் தடம் புரண்டு தண்டவாளத்தில் விழுந்த நிலையில், இரண்டாவதாக வந்த ரயில் அதனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்