துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் உப்புக் கொள்கலன்கள்!

#SriLanka #Salt
Thamilini
3 hours ago
துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் உப்புக் கொள்கலன்கள்!

இறக்குமதி செய்யப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட உப்பு கொள்களன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பது தற்போது தெரியவந்துள்ளது. 

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) ஒப்புதல் தாமதம் காரணமாக கிட்டத்தட்ட 700 உப்பு கொள்கலன்கள் இலங்கை சுங்கத்தில் தேங்கிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு நாட்டில் நிலவிய உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையாக, தனியார் இறக்குமதியாளர்கள் உப்பு இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி, உப்பு இறக்குமதி ஜூன் 10, 2025 க்கு முன்பு முடிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஒரு வர்த்தமானி அறிவிப்பும்  வெளியிடப்பட்டது.

இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் இறக்குமதியாளர்கள் தொடர்ந்து உப்பைக் கொண்டு வருவதாகவும், இந்த சரக்குகள் தற்போது துறைமுக வசதிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!