நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (19) நடைபெற்ற அதன் நிர்வாகக் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக GMOA குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய தொழிற்சங்க நடவடிக்கை வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரசாங்கம் மருத்துவர்கள் மற்றும் பரந்த சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டது எனவும் இது மருத்துவ சமூகத்திற்குள் கணிசமான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, முன்மொழியப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாகவும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் மீளவும் போராட்டத்தை தொடர தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்