அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமைகள் தொடர்பான விதிகளை திருத்த அமைச்சரவை ஒப்புதல்!
ஜனவரி 1, 2016 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்களின் நியமனக் கடிதங்களில் ஓய்வூதிய உரிமைகள் தொடர்பான விதிகளைத் திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்தகால சட்டத்தின்படி, 2016.01.01 திகதியின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச அலுவலர்களின் நியமன கடிதங்களில் ஓய்வூதியமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு உரித்தான ஓய்வூதிய முறை தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு இணங்கியொழுக வேண்டும்' எனும் ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 2016.01.01 திகதியின் பின்னர் அரச சேவைக்கு நியமனம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய முறை இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பதுடன், தற்போதுள்ள ஓய்வூதிய முறைக்கான அவர்களது உரித்தை உறுதி செய்து குறித்த நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான நிபந்தனை திருத்தம் செய்வதற்காக 2026 வரவுசெலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்