ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 9 பேர் உயிரிழப்பு

#Israel #Death #world news #Tamilnews
Prasuat month ago

பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல், பல ஆண்டுகளாக நீண்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது. 

ஆனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி ஒழித்துக்கட்ட இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதனால் மேற்கு கரை, காசா முனை பகுதியில் இரு தரப்பும் அடிக்கடி மோதி வருகின்றன. 

இதனால் இரு தரப்பிலும் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

பலர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். மேற்குக் கரையின் போராளிகளின் கோட்டையான ஜெனின் அகதிகள் முகாமில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின்போது 

இந்த வன்முறை நிகழ்ந்ததாக கூறி உள்ளனர். இந்த மாதத்தில் மோதல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

வியாழக்கிழமை கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.