பிரித்தானியாவில் பிரதமரின் அணுகுமுறை நோயாளர்களை ஆபத்தில் ஆழ்த்துவதாக மக்கள் விசனம்!

#world news #Lanka4 #Tamilnews #Britain #President #strike #people
Nilaat month ago

பிரித்தானியாவில் ஆம்புலன்ஸ்  வேலைநிறுத்தங்கள் நோயாளர்களை ஆபத்தில் ஆழ்த்தவில்லை. மாறாக பிரதமர் ரிஷி சுனக்கின் அணுகுமுறையே அவர்களை ஆபத்தில் ஆழ்த்துவதாக தொழிற்சங்க  போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்துள்ளனர். 

அயர்லாந்தில் உள்ள ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் ஊதியம் உயர்வு, பாதுகாப்பு, மைலேஜ் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். . 

வடக்கு அயர்லாந்தில் சுகாதார அமைச்சர் ,ல்லாத நிலையில், பிரதமர் நேரடியாக தலையிட்டு தீர்வினை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

,இது குறித்து கருத்து தெரிவித்துள்ள செவிலியர் லிண்டா ஸ்மித்  வேலைநிறுத்தங்கள் நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்துவதை விட அரசாங்கத்தின் நடவடிக்கையே அவர்களை ஆபத்தல் ஆழ்த்துகிறது என்றார்.