அல்சர், குடல் வீக்கம், மலச்சிக்கல் (பெருங்குடல் அழற்சி) அறிகுறிகள் உள்ளவர்களுக்கோர் அவசர தகவல்...!

#Health #Food #people #information #அல்சர் #குடல்புண் #இரைப்பை #அறிகுறி
Nilaat month's ago

அல்சர் / குடல்புண்ணால் அவதியா...?
குடல் வீக்கத்தால் சாப்பிட சிரமப்படுகின்றீர்களா...?
மலச்சிக்கலால் மிகவும் அவஸ்தைப்படுகின்றீர்களா...?
இவற்றுக்கான அறிகுறிகள் என்ன...?
இவை என்ன காரணத்திற்காக ஏற்படுகின்றன...?
இவற்றை குணப்படுத்த என்ன செய்யலாம்...?

கண்டிப்பாக அறியவேண்டிய விஷயம். ஆம் அறிவோம் வாருங்கள். 

குடல் புண் தொல்லையால் அவதிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இன்று அதிக நபர்களுக்கு  இருக்கும் பிரச்சினைகளில் ஓன்று  குடல் புண் . இது குடலில் ஒருவிதமான எரிச்சலை ஏற்படுத்தும். 

நாம் உன்னும் உணவானது குடலை அடைந்ததும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது.  இந்த திரவங்களின் மூலமாக நாம் உண்ணும் உணவானது செரிக்க ஆரம்பிகிறது. தினமும் காலையில் இந்த திரவமானது அதிகமாக சுரக்கிறது. மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த அமிலங்கள் அதிக அளவில் சுரக்கும். காலை உணவை தவிர்த்தல் அல்லது தள்ளிப்போட்டால் சுரக்கப்பட்ட அமிலமானது செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாததால் குடலை அரிக்க ஆரம்பிக்கும். அதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்பட ஆரம்பிக்கும் என்று கூறப்படுகின்றது. 

 புளிப்பு அதிகமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குடல்புண்  வருவதற்கு முக்கிய காரணம் காரமான  உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு, அசைவ உணவு. மது அருந்துதல், புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல் இதைத் தவிர  அடிக்கடி  சாப்பிடும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை (குடல்புண் ) உருவாக்கலாம்.

 இதனால்  வயிற்றில் உள்ள சிறுகுடல், கணையம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது அழற்சி ஏற்பட்டு வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
 
இதுதவிர இரைப்பை அழற்சி, இரைப்பை புண், முன் சிறுகுடல் புண், இரைப்பையும் உணவுக் குழலும் இணையுமிடத்தில் ஏற்படும் புண்களும் வயிற்றில்  ஏற்படும் எரிச்சலுக்கான காரணங்களாகும். 

பொதுவாக உணவுக்குழாயில் அல்லது முன் சிறுகுடலில் புண்கள் ஏற்படும் போது அவை பெப்டிக் அல்சர்(pepetic ulcer) என அழைக்கப்படுகின்றன.

ஆனால் இரைப்பையில் ஏற்படும் புண்கள் குறிப்பாக காஸ்ட்ரிக் அல்சர்(gastric ulcer) என்று அழைக்கப்படும்.

 பொதுவான அறிகுறி 

உங்கள் மார்பு மற்றும் வயிற்று பகுதிக்கு இடையே உள்ள பகுதியில் அல்லது வயிற்றின் நடுவில் ஒரு எரியும் உணர்வு அல்லது ஒரு வலி(stomach pain) ஏற்படும். நீங்கள் சாப்பிடாமல் வெறும் வயிறாக இருக்கும் போது வலி மிகவும் அதிகமாக இருக்கும். 

சில நேரங்களில் அஜீரண கோளாறுகள் காரணமாகவும் வயிற்று வலி ஏற்படலாம்.

சாப்பிட்ட பின்னர் நெஞ்சு எரிச்சல் வயிற்று வலியுடன் சேர்ந்து வந்தால்  அது குடற் புண்ணுக்கான அறிகுறி ஆகும். 

குமட்டல் அல்லது வாந்தி தொடர்ச்சியாக இருக்குமாயின் அதுவும் அறிகுறியாக இருக்கலாம்..சில நேரங்களில் இரத்தத்துடன் கூடிய வாந்தியும் ஏற்படலாம்.

நாம் சாப்பிடட உணவின் சத்துக்கள் அனைத்தும் உடனே வெளியாவதால் உடல் எடை குறையும் இதுவும் குடற் புண் வருவதற்கான அறிகுறி ஆகும்.

பொதுவாக சாப்பிட்டவுடன் ஏப்பம் வரும். அந்த ஏப்பம் புளிப்பு தன்மையுடன் வந்தால் அதுவும் அறிகுறியாகும். 

சில நேரம் சளியுடன் கூடிய தீராத  வயிற்றுப்போக்குடன் இணைந்து வலி இருப்பது, மலச்சிக்கல், வயிறு உப்புதல் , அல்லது வாய்வு போன்றவை உண்டாவதும் வயிற்று குடல்  புண்ணுக்கான அறிகுறி ஆகும்.
 
ஒரு நாளைக்கு 6 முறைக்கு மேல் மலம் கழித்தல். சாப்பிட்ட உடன் மலம் கழித்தல்.

காய்ச்சல்,  தலை சுற்றுதல், மயக்கம், கண் எரிச்சல், மூட்டு வலி, துர்நாற்றம்,  நீர்சத்து  குறைபாடு, குடல் புற்றுநோய்,  மனஅழுத்தம் ஏற்பட்டாலும் நொய் முற்றிய நிலை ஆகும். 

குடல் வீக்கமடைந்து அடிவயிற்று பகுதியில் வாயுடன் சேர்ந்த கடினமான வலியும் இருந்தால் அது மிகவும் முற்றிய நிலை ஆகும்.

வயிற்று புண்ணுக்கான அறிகுறிகள் மிகவும் அதிகமானால் புண்களில் இரத்தப்போக்கு ஏற்படும். இது மலம் கழிக்கும் போது மலம் கருப்பு நிறமாக வெளியானால் வயிற்று குடல்புண் அதிகமாகிவிட்டது என்று அர்த்தம் என்று கூறப்படுகிறது.

மலச்சிக்கல் இருப்பதால் அதில் பாக்ட்ரியாக்கள் உருவாகி அதன் மூலமாகவும் குடல்புண் வரலாம். 

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பயப்பட வேண்டாம் இதற்கு சித்தா ஆயுர்வேத வைத்தியத்தின் மூலமாக குண்மடைச் செயலாம். 

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்,  
தேவி வைத்தியசாலை,
ராமாபுரம்,  சென்னை 89. 
இந்தியா.  

தொலைபேசி தொடர்புகளுக்கு
இ ந் தியா Whatsapp: +919600336009, 
இலங்கை Whatsapp : +94754154364

 

பிடித்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். இவற்றால் அவஸ்தைப்படுவோர் பூரண குணமடைவர்.