பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

#D K Modi #India #Death #Hospital #Twitter
Nilaat month's ago

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100)  காலமானார். 

வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28ந் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். 

பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று தனது தாயார் ஹீராபெனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இன்று காலை அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமது தாயார் காலமானதாக பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.