அமைதியான முறையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம்!

Amuthuat month's ago

நாட்டில் அமைதியான முறையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனவும் அதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக உள்ளூர் பொலிசாரிடம் உரிய அனுமதிகளைப் பெற வேண்டும் எனவும் பதில் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டத்திற்கான உரிமையை அரசு எப்போதும் மதித்து பாதுகாக்கும் எனவும்
பொது பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனவும் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.