நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் 30 நிமிட பிளாஷ்பேக் காட்சியை பார்த்துவிட்டு இயக்குனரை பாராட்டிய ரஜினி

#Cinema #Tamil-Cinema #Tamilnews #Lanka4
kaniat month's ago

ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் என சினிமாவில் முக்கிய பிரபலங்கள் எல்லோரும் சங்கமித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனம் ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்து பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடைசியாக தமன்னாவும் இந்த படத்தில் நடித்திருப்பதை புகைப்படம் வெளியிட்டு சன் பிக்சர்ஸ் உறுதி செய்திருந்தது. இந்நிலையில் நெல்சன் ஜெயிலர் படத்தின் திரைக்கதையில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளாராம். ஏனென்றால் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் இணையத்தில் மோசமான விமர்சனங்களை பெற்றது.

அதாவது கற்பனைக்கும் அப்பாற்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக பீஸ்ட் படம் ட்ரோல் செய்யப்பட்டதால் நெல்சன் நொந்து நூடுல்ஸ் ஆனார். இதனால் ரஜினி படத்தின் வாய்ப்பே பறிபோகும் நிலைமையும் ஏற்பட்டது. ஆனால் சூப்பர் ஸ்டார் பெரிய மனுஷன் என்பதை நிரூபித்து நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

ஆகையால் நெல்சன் இரவு, பகல் பாராமல் ஜெயிலர் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறாராம். அதன் விளைவாக ஜெயிலர் படத்தில் 30 நிமிட பிளாஷ்பேக் காட்சியை நெல்சன் படமாக்கி உள்ளார். இந்த காட்சியை பார்த்துவிட்டு ஜெயிலர் படக்குழுவில் உள்ள அனைவருமே நெல்சனை பாராட்டி உள்ளனர்.

அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த காட்சியைப் பார்த்துவிட்டு, சூப்பர் போட்ட உழைப்பிற்கு சரியான பலன் கிடைத்துள்ளதாகவும், மகிழ்ச்சி அடைவதாகவும் ரஜினி கூறியுள்ளார். மேலும் நெல்சன் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குவதால் பயத்துடனே பணியாற்றி வருகிறாராம்.

அதனால் ரஜினி நெல்சன் இடம் சில அறிவுரை கூறியுள்ளார். அதாவது ஒரு படம் எடுக்கும்போதே அந்தப் படம் வெற்றி பெறுமா என்பது தெரிந்துவிடும். ஜெயிலர் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக ரஜினி கூறியுள்ளாராம். ஆகையால் நெல்சன் இப்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளாராம்.