மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கலவரம்

மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கலவரம் ஏற்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்று நேற்று இரவு மொரட்டுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இது அமைந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் உறவினர்கள் குழுவொன்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கலவரமாக நடந்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவ, மொரவத்தை, அக்லான மற்றும் லுனாவ பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 20 பேர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட குழுவினரை பொலிஸ் விளக்கமறியலுக்கு அழைத்துச் செல்வதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..