நம்பிக்கையை எந்த நிலையிலும் கைவிடாமல் முழு முயற்சியுடன் ஒரு இரும்பு பெண்மணி ஆக எழுந்து வரும் சமந்தா.

#Actress #Actor #Cinema #Tamil-Cinema #Lanka4
kaniat day's ago

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சில தினங்களுக்கு முன்பு மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதிகமான கஷ்டங்களை அனுபவித்து வந்தார். இவரின் உடல்நிலை பற்றி அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களுக்காக தெரிவித்து வந்தார்.

சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளிவந்த யசோதா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொள்ளும்போது இவரை பார்த்து சில நெகட்டிவ் கமெண்ட்ஸும் இவருக்கு வந்தது. இவரின் முகத்தோற்றம் மற்றும் உடல் எடையை குறித்து அதிகமான விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தார்.

சமந்தா இனிமேல் அவ்வளவுதான் அவருடைய சினிமா கேரியரை விட்டு விலகிவிடுவார் என்று பலரும் பலவிதமாக பேசி வந்தார்கள். இனிமேல் நடிக்க சமந்தாவிற்கு வாய்ப்பு கிடைக்காது என்று சொன்னவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மீண்டும் நடிக்க வருகிறார்.

இப்பொழுது இவர் ‘சிட்டாடல்’ எனும் வெப் சீரிஸ் மூலம் வருண் தவானுடன் நடித்து வருகிறார். இது ஸ்பை திரில்லர் தொடர் கதையாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மூலம் இவரை பழைய சமந்தாவாக பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் OTT இல் அறிமுக செய்வதாக ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து இவரின் சாகுந்தலம் படம் அடுத்த மாதம் திரைக்கு வெளிவர இருக்கிறது. இந்தப் படம் காளிதாசனின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தேவமோகன், மோகன் பாபு, கௌதமி ஆகியோர் நடித்துள்ளனர். இது பிரம்மாண்டமான படமாக இவருக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவருடைய நம்பிக்கையை எந்த நிலையிலும் கைவிடாமல் முழு முயற்சியுடன் ஒரு இரும்பு பெண்மணி ஆக எழுந்து வரும் சமந்தா. இவரின் தன்னம்பிக்கையை பாராட்டி பலரும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரின் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.