புண்களுக்கும், தோலிற்கும் முழுப் பயனையளிக்கவல்லது சித்தகத்திப் புஷ்பம்.

#ஆரோக்கியம் #மூலிகை #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Antoni #Theva #Antoni Thevaraj
Kesariat day's ago

விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் உடலுக்கு எந்தப்பிரச்சினை வந்தாலும் அதற்கு யாதாயினும் மருந்து குளிசைகள் இருக்கும். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் மருந்து குளிசைகளுக்குப் பதிலாக மூலிகை செடிகளை பயன்படுத்தி உடற்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர்.

இன்று நாம் அதன்படி சித்தகத்தி பூவில் இருக்கும் மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கவிருக்கின்றோம்.

இந்த பூக்கள் சிற்றகத்தி மற்றும் கருஞ்செம்பை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சாலை ஓரங்களில் காணப்படும் இந்த சித்தகத்தி பூவின் மருத்துவ பயன்கள் ஏராளம். அதில் முக்கயமானதைப் பார்ப்போம்.

தலைவலி குணமாக:

இந்த சித்தகத்தி பூக்களை நல்லெண்ணெயுடன் காய்ச்சி பின் அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்து கொள்ளவும். பின் இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி, கழுத்து நரம்பு வலி மூக்கில் நீர்வடிதல், சீதளம், தலைபாரம், ஆஸ்துமா மற்றும் தலையில் நீர்கோர்த்தல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

புண்கள் குணமாக:

இந்த பூவுடன் அதன் இலைகளையும் அரைத்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் அது குணமாகும். மேலும் இதை அரைத்து தோளில் தடவி வந்தால் தோளில் ஏற்படும் படை, சொறி, அரிப்பு போன்ற நோய்களை குணப்படுத்திவிடும்

அதுமட்டுமில்லாமல் இது கீல்வாத வலி, காயங்கள், வீக்கம் மற்றும் நீரிழிவு நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.