வயதானவர்கள் என்புத்தேய்மானத்தினை கட்டுப்படுத்துவதற்கான எளிய வழிகள்.

#ஆரோக்கியம் #உடல் #வயது #வலி #நிவாரணம் #Health #Body #Age #Milk Powder #bones
Kesariat month's ago

வயதானவர்களில் எலும்பு தேய்மானம் ஏற்படுவது இயல்பு. அவர்கள் கல்சியம் அதிகமாக உடலில் சேர்ப்பதன் மூலம் என்பை வலுவாக வைத்திருக்கலாம்.

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ போன்ற பானங்களை நாம் அதிகமாக குடிப்பதால், நம் உடம்பில் உள்ள கால்சியம் குறைவதற்கு காரணமாக உள்ளது.

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை. அவர்கள் கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம்.

காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது. எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உவு மருந்து பிரண்டை என்னும் கொடி, பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.

இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது. சிறந்த வலி நிவாரணியாகவும், வலி, வீக்கத்தை குறைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு. பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.