சிவப்பரிசி புட்டு செய்முறை

#How_to_make #Recipe #Food
Maniat day's ago

தேவையானவை:

சிவப்பரிசி மாவு - ஒரு கப்,
சர்க்கரை - ருசிக்கேற்ப,
தேங்காய் துருவல் - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

வறுத்த சிவப்பரிசி மாவை தண்ணீர் தெளித்துப் பிசிறிக் கொள்ளவும் (கட்டியில்லாமல் பிசிறவும்). ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் ஆவியில் வேக வைத்து எடுத்து, வேக வைத்த மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை,  ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து நன்கு கலக்கினால்... சுவையான சிவப்பரிசி புட்டு தயார்.