மனிதர்களைப் பற்றிய சில உளவியல் உண்மைகள் - உங்களுக்கும் பொருந்துமா...?

Nilaat year ago

மனிதர்கள் பலவிதம். அவர்களின் குணவியல்புகள் பற்பலவிதம். அக் குணவியல்புகளுக்கு ஏற்ப மனிதர்கள் அனைவரும் மாறுவார்கள்.

சிலரோ சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவர், சிலரை சூழ்நிலை மாற்றும் சிலரால் சூழ்நிலை மாறும். அவ்வாறு குணம் கொண்ட உயிரினமே மனிதன்.

இவ்வாறான மனிதனைப் பற்றிய சில உளவியல் உண்மைகள்

சிலர் உறங்கும் போது அதிக தலையணைகள் தலைக்கும் தன்னைச் சுற்றியும் வைத்துக்கொண்டு உறங்குவார்கள். அவ்வாறு அதிக தலையணைகள் வைத்துக்கொண்டு உறங்குபவர்கள் பெரும்பாலும் தனிமையிலும்‌‌ மன அழுத்தத்திலும்‌ இருப்பவர்கள்.

உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களின்‌ குறுஞ்செய்திகளை வாசிக்கும்பொழுது உங்கள் மனம் அந்தக் குறுஞ்செய்திகளை அவர்களின் குரலில் வாசிப்பதை உணரலாம்.

உங்கள் தலையை வலதுபக்கமாக சற்று மேல் நோக்கி சாய்த்துப் பார்க்கும்போது வழக்கத்தை விட வசீகரமானவராக தெரிவீர்கள். ஃபோட்டோக்கு போஸ் குடுக்கும் போது இத ட்ரை பண்ணிப் பாருங்க...

நாம் இவ்வளவு அழகானவர்கள் என்று நாம் எண்ணிக்கொண்டிருப்போம் அல்லவா! உண்மையிலேயே அதைக்காட்டிலும் நாம் 20% அதிக வசீகரத்துடன் பிறர் பார்வைக்குத் தெரிவோமாம்.

நீங்கள் கடும்‌ கோபக்காரராகக் கூட‌ இருக்கலாம். ஆனால் உங்கள் மனதுக்குப் பிடித்தவர்‌‌ எனில் உடனே‌ மன்னித்து விடுவீர்கள்.

நீங்கள் கண்ணாடியின் முன் நின்று அடிக்கடி பேசிக் கொள்வீர்களா, கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்து அடிக்கடி ஊக்கப்படுத்திக் கொள்பவரா?!! ஆம்‌ எனில் நீங்கள் மற்றவரைக் காட்டிலும் மனபலம்‌ வாய்ந்தவர்!!

பொதுவாக மனிதர்கள் ஏதாவது ஒன்றை நினைத்து அழும்போது இதற்கு முன் நடந்த வேறு சில கசப்பான‌ அனுபவங்களையும் நினைத்து‌ அதிகமாக அழுகிறார்கள். அதாவது அழுகையை அதிகப்படுத்த வேறு சில சம்பவங்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.

பெரும்பான்மையான மக்கள் வலது கையை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். சிலர் இடது கையை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். நீங்கள் எந்தக் கையை குறைவாகப் பயன்படுத்துகிறீர்களா அந்தக்‌கையைக் கொண்டு சில இயல்பான‌ வேலைகளைச் (பொருள்களை எடுத்தல், பல் துலக்குதல், கதவு, சன்னல்கள் திறத்தல்/மூடுதல், இது போல நிறைய...)‌ செய்ய முயலுங்கள். இவ்வாறு இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால் உங்களின் சுயக்கட்டுப்பாட்டு உணர்வு அதிகமாகுமாம்.

அதிக IQ திறன் கொண்டவர்கள் பெரும்பாலும் Insomnia எனப்படும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்படுகிறார்களாம்.

99% மக்கள் தங்களைப் பார்த்து யாரேனும்‌ " நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கவா? " என்று கேட்டால் பீதி அடைவார்களாம்.

ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணைப் பிடித்து விட்டால் மற்றவர்களைக் காட்டிலும் அவரிடத்தில் மட்டும் அதிக சத்தமாகவும் உற்சாகமாகவும் பேசுவாளாம்.

பெரும்பாலும் தன் காதலை முதன்முதலில் வெளிப்படுத்துவது பெண்களே‌.

ஒருவர் உங்களிடத்தில் மற்றவர்களைப்‌ பற்றி பேசும் விதத்தைக் கூர்ந்து கவனியுங்கள். ஏனெனில் உங்களைப்‌ பற்றியும் மற்றவர்களிடத்தில் இதே போலத்தான் பேசுவார்கள்.

ஏழு வருடத்திற்கும் மேலே ஒரு நட்பு தொடர்கிறது என்றால் அது வாழ்நாள் காலம் முழுவதும் தொடர்ந்து நீடிக்கும்.