இலங்கையின் பொருளாதாரம் செயற்கை சுவாசத்தில் உள்ளது: சர்வதேச ஊடகம்

#Sri Lanka #economy #America
Amuthuat month ago

இலங்கை மீண்டும் அமைதியாகியுள்ளது. இதற்காக அங்கு எல்லாமே சிறப்பாக இருக்கிறது என்ற அர்த்தம் இல்லை என்று த நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால், இலங்கை, அரசியல் குழப்பம் மற்றும் திவால் நிலையில் இருந்து அமைதி நிலைக்கு திரும்பியுள்ளது. 

எனினும் அடிப்படையில் தீவு தேசத்தின் பொருளாதாரம் செயற்கை சுவாசத்தில் உள்ளது. நசுக்கும் கடனில் இருந்து அரசாங்கம் இன்னும் மீளவில்லை. 

பல இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். 
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 30 சதவீத மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையில் உள்ளனர்.

இந்தியா, கடன் மறுசீரமைப்புக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது. கடந்த வாரம், சீனாவும், சர்வதேச நாணய நிதியத்துக்கு தமது ஆரம்ப பதிலை அனுப்பியது. இலங்கை அதிகாரிகள் நம்பிக்கையளிப்பதாகக் கூறினர்

எனினும்  இது சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தநிலையில், பீய்ஜிங் வேண்டுமென்றே நகர்கிறது, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கைக்கு வழங்கும் எந்தவொரு சலுகையும், தாம் கடன் வழங்கியுள்ள ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்து விடும் என்று அது நினைக்கிறது.

மறுபுறத்தில் சீனாவை எதிர்பார்த்து, இலங்கை அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்ட இடைவெளியைக் குறைக்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிவர்த்தி செய்து வருகிறது. 
 
இதில், வரிகளை உயர்த்துதல், எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான மானியங்களைக் குறைத்தல் மற்றும் பணத்தை இழக்கும் பொது நிறுவனங்களின் தனியார் மயப்படுத்தும் திட்டங்கள் அடங்குவதாக த நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.