அன்போடு பேசி போதல். சிட்டுக் குருவி சிறகடித்துப் பறக்க சின்னப் பொண்ணு சினுங்கி கொண்டாய். இன்றைய கவிதை 18-03-2023.

அன்போடு பேசி போதல்
===========================
சிட்டுக் குருவி
சிறகடித்துப் பறக்க
சின்னப் பொண்ணு
சினுங்கி கொண்டாய்.
வண்ணத்து பூச்சி
சிறகடித்த போது
உந்தன் மனசு
வெதும்பிக் கொண்டது.
நாணலும் சாய்ந்தது
ஓடும் நீரின் திசையில்.
காற்றும் வீசியது
வெப்பத் தளம்பலில்.
கண்ணே நீயும் இப்போ
கொஞ்சம் கேளடி .
இங்கே எல்லாம் அந்த
இயற்கை வழியில்.
உந்தன் இரசணை
இன்பம் தேடி ஓட
கொஞ்சம் நீயும் பார்
இயற்கை தன் பாட்டில்.
அன்போடு ஒரு உறவு
கதை பேசி மகிழும்
நிலை மாறிப் போதல்
மனம் நொந்து சாகும்.
........ அன்புடன் நதுநசி

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..