பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழப்பு!

புற்றுநோய் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
83 வயதான அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா அணி வென்று 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இதையடுத்து கால்பந்து ஜாம்பவான் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள போது பிரேசில் அணி கோப்பையை கைப்பற்றி தாயகம் திரும்ப வாழ்த்து கூறினார்.
82 வயதான பீலே கால்பந்து வரலாற்றில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்த ஒரே வீரர் என்றும், 3 முறை உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தவராவார்.

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..