பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

#Sri Lanka #Sri Lanka President #Susil Premajayantha #Ministry of Education #education
Amuthuat month ago

பாடசாலை சீருடைகள் உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில்  பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சீருடைத் தேவையின் 70% மானியமாக சீனக் குடியரசில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் எனவும், இலங்கைக்கு ஏற்கனவே முதல் தொகுதி கிடைத்துள்ளதாகவும்  வர தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை லிண்ட்சே மகளிர் கல்லூரியுடன் இணைந்த விசாகா மகளிர் கல்லூரியில் வகுப்பறை இடப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சுசில் பிரேமஜயந்த, பாடசாலைகளின் பௌதீக வள அபிவிருத்தியுடன் கல்வியின் தர அபிவிருத்தியும் பேணப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் தினசரி நடைமுறை திட்டங்களை செயல்படுத்தி மாணவர்களின் ஒழுக்கத்தையும் மன உறுதியையும் வளர்த்து கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவதாகவும், தன்னம்பிக்கையை வளர்க்கும் வேலைத்திட்டம் தற்போது செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.