மார்ச்-9 தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை :ஜீ.எல். பீரிஸ்

#G. L. Peiris #Election
Pratheesat month's ago

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஜனதா சபை இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திட்டமிட்ட பிரச்சாரப் பொறிமுறையொன்றை அமுல்படுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியினால் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.