முப்பது வயதில் ஆண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை

#Lifestyle #Love #work
Nilaat month's ago

வாழ்க்கை அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. அதன் நிலைப்பாடு மேகத்தினை போல, ஏன் மாறவில்லை என்றும் கேட்க இயலாது, மாறிய பிறகு ஏன் மாறினாய் என்றும் கேட்க இயலாது. வெயில் அடித்தாலும், மழை அடித்தாலும் பாதுகாப்பிற்கு நீங்கள் தான் குடையை வைத்திருக்க வேண்டுமே தவிர, வாழ்க்கையை நொந்துக் கொள்வதில் எந்த பயனும் இல்லை.

வயது ஏறும் போது, அந்த நிலைக்கு ஏற்ப நீங்களும் உங்களை மாற்றியமைத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். சரியாக சொல்ல வேண்டுமெனில், உங்களை நீங்கள் அடுத்த நிலைக்கு எடுத்த செல்ல வேண்டும்.

ஆண்களை பொறுத்தவரையிலும் முப்பது வயதென்பது அவர்களது வாழ்க்கையின் முக்கியமான கட்டம். முப்பதுகளில் சறுக்கிய சிலர் கடைசி வரை எழாமலேயே கூட இருந்திருக்கின்றனர். எனவே, முப்பதை எட்டும் ஆண்கள் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

முப்பது வயதில் ஒவ்வொரு ஆணும், அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விஷயம், அவர்களது வாழ்க்கை பயணம் எதை நோக்கி நகரப் போகிறது என்பது தான். பயணத்தை தொடங்காவிட்டாலும் கூட, நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள், உங்களது எல்லை கோடு எவ்விடத்தில் இருக்கிறது என்றாவது அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

கண்டிப்பாக முப்பது வயதில், சேமிப்பு அவசியம். திருமணம், மனைவி, குழந்தைகள், இவ்வளவு நாட்கள் உங்களை பார்த்துக்கொண்டபெற்றோரை நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை என இவை அனைத்திற்கும் சேமிப்பு முக்கியம்.

இருபதுகளில் உங்களோடு லூட்டி அடித்துக்கொண்டிருந்த நட்பு வட்டாரங்கள் முப்பதுகளிலும் அதே மாதிரி இருக்க வாய்ப்புகள் இல்லை. உங்களது தொழில் மற்றும் வேலைகள் அதற்கு இடமும் கொடுக்காது. ஆயினும் கூட, உங்களை தோள் கொடுத்து தாங்க ஓர் நல்ல நட்பு வட்டாரம் அவசியம் தேவை. அவ்வாறான நண்பர்களை கட்டிக்காக்க வேண்டியது அவசியம்.

முப்பது வயதை எட்டிய பிறகும் கூட அப்பா, அம்மா, அண்ணன் என்று குடும்பத்தை சார்ந்து இருப்பது தவறு. நீங்கள் தனித்து நிற்க வேண்டும், போராட வேண்டும், உங்களுக்கான நிலையையும், பெயரையும் நீங்களே அமைத்துக்கொள்ள வேண்டும். உதவி நாடுவதை நிறுத்தி, நீங்கள் அவர்களுக்கு உதவும் நிலைக்கு உயர வேண்டும்.

இனியும் நீங்கள் உங்களது உடல்திறன், ஆரோக்கியம் மீது அக்கறையின்றி இருத்தல் கூடாது. உடற்பயிற்சி, நல்ல உணவு முறை என மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம். ஏனெனில், முப்பது வயதிற்கு மேல், உங்களது உடல்நிலை உங்களை மட்டுமின்றி, உங்களது குடும்பத்தையும்பாதிக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பாதையில் நீங்கள் பயணிக்க தொங்க வேண்டிய நேரம் இது. பணம் ஈட்டுவதற்காக மாட்டுமின்றி. உங்களது தரத்தையும், வாழ்க்கையையும் அடுத்த நிலைக்கு நகர்த்த நீங்கள் தயங்காமல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். பிரிவுகள் ஏற்படலாம், ஆயினும் கூட நீங்கள் முழுவீச்சில் முனைந்து செயல்பட வேண்டியது அவசியம், பிரிவுகளில் தான் பிரியமும் கூடும்.

உங்கள் தொழிலை, வேலையை அனைத்தையும் நீங்கள் விரும்பி செய்ய வேண்டும். இந்த காதல், நீங்கள் தோற்றாலும் மீண்டு வர இயலும். இது வெற்றியை மீட்டெடுக்க உதவும் கருவி. எனவே, உங்களை நீங்களே விரும்ப தொடங்க வேண்டிய தருணம் இது