அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 05.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat month ago

மேஷம்
அசுவினி: உங்கள் செயல்கள் வெற்றியாகும். ஆதாயம் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.
பரணி: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். பொருளாதார நிலை உயரும்.
கார்த்திகை 1: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். சிலர் புதிய சொத்துகள் வாங்குவீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் உண்டாகும்.
ரோகிணி: வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் நிலை சீராகும்.
திருவாதிரை: புதிய நண்பர்களின் உதவியால் உங்களது பிரச்னைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கடகம்
புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு உண்டு. கடன்களை அடைப்பீர்கள்.
பூசம்: வேலை வாய்ப்பிற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆயில்யம்: தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்
மகம்: உங்களது முயற்சி கடைசி நேரத்தில் இழுபறியாகும். நிதானமுடன் செயல்படுவதால் நன்மையுண்டு.
பூரம்: உங்கள் ஆற்றல் வெளிப்படும் நாள். திறமையுடன் செயல்பட்டு எதிர்பார்த்தவற்றில் லாபமடைவீர்கள்.
உத்தரம் 1: அரசு வழியில் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சி மேற்கொள்வீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: நீங்கள் விரும்பாத செயல்கள் இன்று நடக்க வாய்ப்புண்டு. விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
அஸ்தம்: உங்கள் செயல்களில் எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். சிலர் மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள்.
சித்திரை 1, 2: மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறாமல் தள்ளிப்போகும்.

துலாம்
சித்திரை 3, 4: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: நண்பர்கள் துணையுடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள். ஆதாயமான நாள்.
விசாகம் 1, 2, 3: உங்கள் செயல்களில் இன்று தெளிவு இருக்கும். திட்டமிட்டு செயல்படும் முயற்சி சாதகமாகும்.

விருச்சிகம்
விசாகம் 4: எதிரிகளின் தொல்லை விலகும். முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்கள்.
அனுஷம்: அலுவலகத்தில் இருந்த மறைமுக எதிரிகள் இடம் மாறுவர். உங்கள் செல்வாக்கு உயரும்.
கேட்டை: நீண்ட நாள் பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர்கள். பிறரை அனுசரித்துச் சென்று ஆதாயம் அடைவீர்கள்.

தனுசு
மூலம்: உங்கள் முயற்சிகள் இன்று எதிர்மறையாகும். அவசர செயல்களில் அனுகூலம் இல்லாமல் போகும்.
பூராடம்: சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைய அடைய முடியாமல் போகும்.
உத்திராடம் 1: பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். அவர்களுக்காக புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: அரசாங்க விஷயத்தில் நிதானம் தேவை. இல்லையெனில் சட்ட சிக்கலுக்கு ஆளாக வேண்டி வரும்.
திருவோணம்: அறிமுகம் இல்லாதவருடன் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.
அவிட்டம் 1, 2: சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் சங்கடத்தை ஏற்படுத்தும். பேச்சில் கவனம் தேவை.

கும்பம்
அவிட்டம் 3, 4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சதயம்: உங்கள் எண்ணப்படி செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1, 2, 3: ஆரோக்கியத்தில் உண்டான சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்

மீனம்
பூரட்டாதி 4: புதிய முதலீடுகள் இன்று வேண்டாம். பண விவகாரங்களில் கவனம் தேவை.
உத்திரட்டாதி: குடும்பத்தினர் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
ரேவதி: அரசு வழி முயற்சிகள் ஆதாயம் ஆகும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.