அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 13.08.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat month ago

மேஷம்: 
அசுவினி : வியாபாரத்தில் உண்டான தடை விலகும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
பரணி : உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
கார்த்திகை 1 : புதியவர்களை நம்பி இன்று வேலை எதுவும் ஒப்படைக்க வேண்டாம்.

ரிஷபம்: 
கார்த்திகை 2, 3, 4 : உங்கள் முயற்சி லாபம் தரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : தொழிலில் தடைகளை சரி செய்து வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள். நன்மையான நாள்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4 : மதியம் வரை உங்கள் செயல் இழுபறியாகும் அதன்பின் நிறைவேறும். பொறுமை தேவை.
திருவாதிரை : தடைகளைத் தாண்டி நினைத்ததில் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : தொழிலில் சில தடைகளை சந்திப்பீர்கள். மதியத்திற்கு மேல் விறுவிறுப்பாக செயல்படுவீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4 : கவனமான நாள். மதியத்திற்கு மேல் குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்பட்டு மறையும்.
பூசம் : மதியம் வரை இருந்த நிலை மாறும். நினைத்த செயலை நிறைவேற்ற கடின முயற்சி எடுப்பீர்கள்.
ஆயில்யம் : இன்று மற்றவர்களிடம் விவாதங்கள் வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.

சிம்மம்: 
மகம் : உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரம்: நண்பர்கள் உதவியுடன் செயல் ஒன்று நிறைவேறும். வரவேண்டிய பாக்கி பணம் வந்து சேரும்.
உத்திரம் 1 : புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னி: 
உத்திரம் 2, 3, 4 : எதிர்ப்புகள் இல்லாமல் செயல்படுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
அஸ்தம் : உறவினர்களால் உண்டான பிரச்னை தீரும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சித்திரை 1, 2 : வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர்கள். மறைமுகத் தொல்லை விலகும். அமைதியான நாள்.

துலாம்: 
சித்திரை 3, 4 : வாரிசுகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.
சுவாதி : நவீன பொருட்கள் வாங்கும் முயற்சி இன்று நிறைவேறும். பயணங்களால் நன்மை உண்டு.
விசாகம் 1, 2, 3 : பணியிடத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டுவீர்கள். உங்கள் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: 
விசாகம் 4 : உறவினர்களின் ஆதரவுடன் செயலில் வெற்றி அடைவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அனுஷம் : தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
கேட்டை : பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். நேற்றைய கடனை அடைப்பீர்கள்.

தனுசு: 
மூலம் : சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பூராடம் : தொழிலில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் 1 : வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

மகரம்: 
உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்ததை அடைவீர்கள்.
திருவோணம் : ஆரோக்யம் சீராகும். வரவேண்டிய பணம் வந்து சேரும். ஆதாயமான நாள்.
அவிட்டம் 1, 2 : வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். வெளியூர் பயணம் செல்வீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3, 4 : திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் விலகுவார்கள்.
சதயம் : குடும்பத்தில் சிறு பிரச்னை உண்டாகும். உங்கள் எண்ணத்திற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும்.
பூரட்டாதி 1, 2, 3: முதலாளியிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பண வரவு உண்டாகும்.

மீனம்: 
பூரட்டாதி 4 : திடீர் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவால் அதை சரி செய்வீர்கள்.
உத்திரட்டாதி : குடும்பத்திற்காக செலவு அதிகரிக்கும். யாரிடமும் வீண்பேச்சு வேண்டாம்.
ரேவதி : புதிய செயல் இழுபறியாகும். வெளியூர் பயணத்தால் அலைச்சல் கூடும்.