அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 20.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat day's ago

மேஷம்
அசுவினி: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும்.
பரணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் தீரும். மறைமுகத் தொல்லைகள் விலகும்.
கார்த்திகை 1: இழுபறியாக இருந்த செயல் வெற்றி பெறும். பணவரவால் மகிழ்ச்சி சேரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: எதிர்பார்த்தவற்றில் இழுபறி நிலை ஏற்படும். முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.
ரோகிணி: குடும்ப பிரச்னைகள் வந்து போகும். பிள்ளைகளின் நலனில் கவனம் செல்லும்.
மிருகசீரிடம் 1, 2: சொத்து வாங்க முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: தாய்வழி உறவால் நன்மை சேரும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
திருவாதிரை: மனம் பலவழிகளில் அலைபாயும். நண்பர்கள் ஆதரவு காட்டுவார்கள்.
புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. போராடி வெற்றி பெற வேண்டிய நாள்.

கடகம்
புனர்பூசம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் லாபமாகும்.
பூசம்: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தந்தைவழியில் ஆதரவு உண்டாகும்.
ஆயில்யம்: விலகிச் சென்றவர்கள் தேடி வருவர். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்
மகம்: வார்த்தைகளில் கவனம் தேவை. கவனக்குறைவால் இழப்புகளை சந்திப்பீர்கள்.
பூரம்: குடும்பத்தில் செல்வாக்கு உயரும். உறவினர் உதவியால் செயல்கள் நிறைவேறும்.
உத்திரம் 1: பணியில் உண்டான பிரச்னையை சரிசெய்வீர்கள். வருமானம் வந்தாலும் செலவும் கூடும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்தவற்றில் சாதகமான நிலை உருவாகும். குடும்பத்தில் சல சலப்பு ஏற்படும்.
அஸ்தம்: அக்கம் பக்கத்தினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும்.
சித்திரை 1, 2: திட்டமிட்டு செயல்படுவீர்கள். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

துலாம்
சித்திரை 3, 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
சுவாதி: வீடு, வாகன வகைகளில் செலவு ஏற்படும். எதிர்பார்த்த வரவில் தடையுண்டாகும்.
விசாகம் 1, 2, 3: தடுமாற்றம் உண்டாகும். முயற்சியில் கவனம் செலுத்த முடியாமல் போகும்

விருச்சிகம்
விசாகம் 4: தனித்திறனால் செல்வாக்கு உயரும். வேலைகளில் இருந்த தடைகள் விலகும்.
அனுஷம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். பணவரவால் சங்கடம் தீரும்.
கேட்டை: மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு பணியை நீங்கள் முடித்துக் காட்டுவீர்கள்.

தனுசு
மூலம்: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
பூராடம்: தொழில் மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்குவீர்கள். எண்ணம் நிறைவேறும்.
உத்திராடம் 1: போட்டியாளர்களை சமாளித்து வெல்வீர்கள். செல்வாக்கு உயரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: முயற்சிகளில் தாமதம் உண்டானாலும் முடிவு சாதகமாக அமையும்.
திருவோணம்: தெய்வ அருளால் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த ஒன்றை அடைவீர்கள்.
அவிட்டம் 1, 2: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். பகைவரால் சங்கடங்கள் ஏற்படும்.
சதயம்: நீங்கள் ஈடுபடும் முயற்சியில் எதிர்பார்த்த பலனை அடைய முடியாமல் போகும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிரிகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பெரியோர் ஆலோசனையால் ஆறுதல் கிடைக்கும்.

மீனம்
பூரட்டாதி 4: உற்சாகமாக செயல்படுவீர்கள். எதிர்பாலினரால் ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பரால் நன்மை ஏற்படும்.
ரேவதி: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.