இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 09

Rehaat year ago

குறள்:- 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

விளக்கம்: சாலமன் பாப்பையா. 
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

விளக்கம்:- SHELVA SWISS.
மனதிலே உதிக்கும் மகுடமான எண்ணங்கள், கடவுள் என அனைத்து உள்ளங்களாலும் போற்றப்படும் சாதக ஆற்றலுக்கு மதிப்பழித்து, அதனைப் பற்றி வாழாத வாழ்வு, புலன்கள் இருந்தும் இயங்காத பொறியை ஒத்ததாம்.