அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 01.12.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat month's ago

மேஷம்
அசுவினி: பண வரவில் இருந்த தடைகள் விலகும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.
பரணி: பெரியவர்கள் ஆதரவுடன் செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். பணம் பல வழிகளிலும் வரும்.
கார்த்திகை 1: அறிமுகம் இல்லாதவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கவனம் தேவை.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: உங்களது முயற்சிகள் பலன் அளிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரோகிணி: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1, 2: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்து வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்.
திருவாதிரை: நினைத்ததை இன்று செய்து முடிப்பீர்கள். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். நிதிநிலை உயரும்.
புனர்பூசம் 1, 2, 3: தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடன்களால் ஏற்பட்டிருந்த சங்கடம் விலகும்.

கடகம்
புனர்பூசம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
பூசம்: நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: பிறரிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதனால் பிரச்னைகள் உருவாகலாம்.

சிம்மம்
மகம்: உங்கள் முயற்சிகள் நிறைவேறும். நண்பர்கள் உதவியால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
பூரம்: எதிர்பாலினர் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
உத்திரம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதி ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: வியாபாரத்தில் உண்டான தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் ஆதாயம் காண்பீர்கள்.
அஸ்தம்: மற்றவரின் மனதைப் புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
சித்திரை 1, 2: தடைகளைக் கண்டறிந்து விலக்குவீர்கள். தொழில் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4: பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
சுவாதி: உறவுகளால் சில சங்கடங்களை அடைவீர்கள். குடும்பத்திற்குள் கருத்து பேதம் உண்டாகும்.
விசாகம் 1, 2, 3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்
விசாகம் 4: தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அனுஷம்: மனதில் உற்சாகம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகி வருமானம் அதிகரிக்கும்.
கேட்டை: கடன்களை அடைப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

தனுசு
மூலம்: கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சரியாகும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
பூராடம்: நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர்கள். உங்கள் முயற்சி ஆதாயம் தரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: உங்கள் சாமர்த்தியத்தால் தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். வருமானம் உயரும்.
திருவோணம்: குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
அவிட்டம் 1, 2: புதிய வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: புதிய பாதையில் பயணிப்பீர்கள். உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்கள் விலகுவர்.
சதயம்: பிரச்னைகளை சரி செய்வீர்கள். உங்கள் விருப்பப்படி செயல்பட்டு அதில் வெற்றி காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பண வரவு உண்டாகும்.

மீனம்
பூரட்டாதி 4: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள்.
உத்திரட்டாதி: உங்கள் தேவைகள் நிறைவேறும். குடும்பத்தினரால் வீண் செலவுகள் அதிகரிக்கும்.
ரேவதி: உங்கள் முயற்சிகள் இழுபறியாகும். திடீர் பயணமும் அலைச்சலும் ஏற்படும்.