அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 24.09.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat month's ago

மேஷம்
அசுவினி: பித்ரு வழிபாட்டை மேற்கொள்வீர்கள். சிலர் ஆலய வழிபாடு செய்வர்.
பரணி: செயலில் உற்சாகம் இருக்கும். உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள்.
கார்த்திகை 1: பொருளாதார உயர்வுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: மதியம் வரை நெருக்கடியைச் சந்திப்பீர்கள். அதன்பின் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
ரோகிணி: உறவினர் ஆதரவுடன் தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: குடியிருப்பை வசதிக்கேற்ப விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் செயல் வெற்றியாகும்.
திருவாதிரை: நண்பர் ஒத்துழைப்புடன் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: உங்கள் ஆற்றல் வெளிப்படும். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.

கடகம்
புனர்பூசம் 4: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
பூசம்: வாக்குவன்மையால் உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
ஆயில்யம்: குழப்பம் விலகும். வியாபாரத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள். லாபம் கூடும்.

சிம்மம்
மகம்: உங்கள் செயல்கள் மதியம் வரை இழுபறியாக இருக்கும். அதன்பின் நடக்கும்.
பூரம்: திருப்புமுனையான நாள். உங்களின் நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
உத்திரம் 1: பெரியவர்களின் வழிகாட்டுதல் லாபம் தரும். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: காலையில் வீண்செலவால் நெருக்கடி உண்டாகும். மதியத்திற்கு மேல் பணம் வரும்.
அஸ்தம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் புதிய செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள்.
சித்திரை 1, 2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். செலவுகள் கட்டுப்படும்.

துலாம்
சித்திரை 3, 4: மதியம்வரை நன்மை அடைவீர்கள். அதன்பின் செயல் இழுபறியாகும்.
சுவாதி: மதியத்திற்கு மேல் எதிர்பாராத செலவை சந்திப்பீர்கள். நிதானமாக செயல்படுங்கள்.
விசாகம் 1, 2, 3: மதியம் வரை மகிழ்ச்சியாகவே செல்லும் அதன்பின் சிரமம் ஏற்படும்.

விருச்சிகம்
விசாகம் 4: சுறுசுறுப்பு கூடும். பொருளாதார நெருக்கடியை சமாளித்து லாபம் காண்பீர்கள்.
அனுஷம்: எதிர்பார்த்த பணம் தேடி வரும். புதிய முயற்சி அனுகூலம் தரும்.
கேட்டை: குடும்பத்தில் பிரச்னை தீரும். எதிர்பாராத வரவால் மனம் மகிழ்வீர்கள்.

தனுசு
மூலம்: எதிர்காலம் கருதி மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். ஆலய வழிபாடு செய்வீர்கள்..
பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.
உத்திராடம் 1: வேலைப்பளு அதிகாரித்தாலும் அதை திறமையுடன் சமாளிப்பீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி மதியத்திற்கு மேல் விலகும்.
திருவோணம்: முயற்சித்தும் நிறைவேறாமல் இருந்த செயல்கள் மதியத்திற்கு மேல் நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். மதியத்திற்கு மேல் ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3, 4: மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம். முன்யோசனையுடன் செயல்படுங்கள்.
சதயம்: காலையில் இருக்கும் உற்சாகம் மதியத்திற்கு மேல் இருக்காது. பிரச்னை உருவாகலாம்.
பூரட்டாதி 1, 2, 3: நினைத்ததை அடைந்து வந்த நிலையில் மதியத்திற்கு மேல் சங்கடம் ஏற்படலாம்.

மீனம்
பூரட்டாதி 4: விருப்பம் இன்று நிறைவேறும். நட்பு வழியே நன்மைகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: முன்னோர் வழிபாட்டில் மனம் செய்வீர்கள். உறவினர் உதவியால் லாபம் காண்பீர்கள்.
ரேவதி: எதிர்பார்ப்பு நிறைவேறும். நல்லவர்களின் ஆலோசனை கிடைக்கப் பெறுவீர்கள்.