அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 26.09.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasuat month's ago

மேஷம்
அசுவினி: உங்கள் முயற்சி வெற்றி பெறும். தடைகளைக் கடந்து சாதிப்பீர்கள்.
பரணி: வியாபாரத்தில் தடைகளை சரிசெய்வீர்கள். முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.
கார்த்திகை 1: குடும்பத்தினர் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். நண்பர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: பிள்ளைகளின் வளர்ச்சி பெருமை சேர்க்கும். அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள்.
ரோகிணி: பழைய செயல் ஒன்றில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் பாராட்டுவர்.
மிருகசீரிடம் 1, 2: மற்றவர்களின் பலம், பலவீனம் அறிந்து வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: குடும்ப பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.
திருவாதிரை: உங்கள் விருப்பப்படி செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். முயற்சி லாபமாகும்.

கடகம்
புனர்பூசம் 4: தொழிலில் இருந்த தடை விலகும். பொருளாதார நிலை உயரும்.
பூசம்: சிந்தித்து செயல்பட்டு நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம்: எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும்.

சிம்மம்
மகம்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். எதிர்பார்த்த வருவாய் வரும்.
பூரம்: தொழில் போட்டியை சரிசெய்வீர்கள். உங்கள் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும்.
உத்திரம் 1: ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த வருவாய் வரும். நிதிநிலை உயரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அஸ்தம்: தடைகள் விலகும். குல தெய்வ அருளால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
சித்திரை 1, 2: தொழிலை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். நிதிநிலை உயரும்.

துலாம்
சித்திரை 3, 4: திடீர் செலவால் பணத்தேவை அதிகரிக்கும். போராடி சமாளிப்பீர்கள்.
சுவாதி: குழப்பம் அதிகரிக்கும். உங்கள் கவனக்குறைவால் செலவுகளை சந்திப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். கூட்டுத்தொழிலில் சங்கடத்தை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4: இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். வராமல் இருந்த பணம் வந்து சேரும்.
அனுஷம்: பிரபலங்களின் துணையுடன் வழக்கில் வெற்றி காண்பீர்கள். சிக்கல் தீரும்.
கேட்டை: விரும்பியதை அடைவீர்கள். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்.

தனுசு
மூலம்: தொழிலில் நஷ்டத்திற்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறை ஆதாயம் தரும்.
பூராடம்: வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனம் சோர்வடையும்.
உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் சிலருக்கு விரும்பிய இடமாற்றம் உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: தடை நீங்கி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
திருவோணம்: திட்டமிட்டபடி செயல்படுவீர்கள். நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: அலுவலகத்தில் உண்டான சங்கடம் மறையும். பணப்புழக்கம் கூடும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும்.
சதயம்: மனதிற்கு சங்கடம் உண்டாகும் வகையில் சில செயல் இன்று நடந்தேறும்.
பூரட்டாதி 1, 2, 3: குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.

மீனம்
பூரட்டாதி 4: தடைபட்ட முயற்சி நடந்தேறும். எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.
உத்திரட்டாதி: நீண்ட நாளுக்குப் பிறகு மனம் மகிழும்படியான சம்பவம் நடைபெறும்.
ரேவதி: சொத்தில் இருந்த பிரச்னை தீரும். எதிர்பாராத வரவு உங்களைத் தேடி வரும்.