காட்டு யானை தாக்கியதில் பரிபமாக இருவர் பலி!!

Prabhaat month ago

சூரியவெவ மீகஹஜதுர பிரதேசத்தில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் சூரியவெவ மற்றும் மீகஹஜதுர பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 49 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காட்டுயானைகள் நடமாடும் பிரதேசங்களில் வீதிகளில் இரவு வேளைகளில் பயணிக்கும் போது அவதானமாக இருக்குமாறும், தேவையற்ற நடமாட்டத்தை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.