அவுஸ்திரேலியாவுக்கு 220 சீர்வேக ஏவுகணைகளை விற்க அமெரிக்கா அனுமதி

#America #Rocket #Missile #Australia #world news #Tamilnews #Lanka4
Prasuat day's ago

அவுஸ்திரேலியாவுக்கு 220 சீர்வேக ஏவுகணைகளை விநியோகிப்பதற்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.

டொமாஹாக் ஏவுகணைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் இவற்றில் அடங்கும். இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க காங்கிரஸின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பது குறிப்படத்தக்கது.

அக்கஸ் (யுரமரள) உடன்படிக்கையில் கீழ் அமெரிக்காவிடமிருந்து அவுஸ்திரேலியா கொள்வனவு செய்யவுள்ள நீர்மூழ்கிகளால் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

உண்மையில் அவசியமான ஆற்றல்களை இந்த ஏவுகணைகள் வழங்கும் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் கூறியுள்ளார்.