2023ம் ஆண்டில் புதிய வாகனங்கள் வாங்கும் அதிர்ஷ்டம் எந்த ராசியினருக்கு?

#Rasipalan #சனிப்பெயர்ச்சி #ஆன்மீகம் #கும்பம் #மகரம் #மேஷம் #ரிஷபம் #வாகனம் #Investigations #luxury vehicle
Nilaat day's ago

2022ம் ஆண்டிற்கு குட்பை சொல்லி விட்டு, பல்வேறு புதிய நம்பிக்கைகளுடன் 2023ம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த 2023ம் வருடத்தில் புதிய கார் அல்லது பைக்  போன்ற புதிய வாகனங்களை  வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் உள்ளது. 

ஆனால் சொந்தமாக ஒரு காரையோ அல்லது பைக்கையோ வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு ஜாதகமும் கை கொடுக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு ஜோதிடம்  மீது நம்பிக்கை உள்ள நிலையில், 2023ம் ஆண்டில் ஒரு சில ராசிக்காரர்கள், நிச்சயமாக புதிய வாகனங்களை வாங்குவார்கள் என ஜோதிடர்கள் அடித்து கூறுகின்றனர். 

அந்த ராசிகள் என்னென்ன? என்பதைபார்க்கலாம்.

 மேஷம்
2023ம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு நன்மைகள் நடைபெறும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். புதிய வாகனம் வாங்குவதும் இதில் ஒன்றாகும்.  (ஜனவரி 17) நடைபெற்ற சனி பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்குமாம். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு, வரும் ஏப்ரல் மாதத்தில், மேஷ ராசிக்காரர்களுக்கு கை கூடி வரும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 

ரிஷபம்
 
2023ம் ஆண்டில் புதிய வாகனம் வாய்ப்பு வாய்ப்பு, ரிஷப ராசிக்காரர்களுக்கும் சாதகமாக காணப்படுகிறது என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். 2023ம் ஆண்டில் அவர்களின் வாழ்க்கை மிகவும் லாபகரமாக இருக்குமாம். அத்துடன் அவர்களின் சொத்து மதிப்பும் உயரலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். எனவே புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பும் கை கூடி வந்துள்ளதாம். 2023ம் ஆண்டின் மே மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை அவர்களுக்கு பொன்னான காலம் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். 

சிம்மம்
சூரியன்தான் சிம்ம ராசியின் அதிபதி. எனவே சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் துணிச்சல் மிக்கவர்களாக கருதப்படுகிறார்கள். புதிய வாகனம் வாங்குவதை பற்றி சிம்ம ராசிக்காரர்கள் சிந்தித்து கொண்டிருந்தால், அதை செயல்படுத்துவதற்கு 2023ம் ஆண்டு மிகவும் சிறப்பானது என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். 

சிம்ம ராசிக்காரர்களும் இந்த வருடம் நிச்சயம் புதிய வாகனங்களை வாங்குவார்களாம். 2023ம் ஆண்டின் ஏப்ரல், மே, நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்கள், சிம்ம ராசிக்காரர்கள் புதிய வாகனங்களை வாங்குவதற்கு சிறந்த மாதங்கள் என ஜோதிடர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகரம்
நீண்ட காலமாக புதிய வாகனம் வாங்கும் கனவை நிறைவேற்ற முடியாமல் போராடி கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு, 2023 வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாம். 2023ம் ஆண்டின் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், மகர ராசிக்காரர்கள் புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் சிறப்பாக இருக்கிறது என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதங்களில் புதிய வாகனங்களை வாங்கினால், மகர ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என ஜோதிடம் கூறுகிறது. 

கும்பம்
2023ம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கும் சாதகமான ஒன்றாம். இந்த ஆண்டில் கும்ப ராசிக்காரர்களின் பல்வேறு கனவுகள் நிறைவேறவுள்ளன. புதிய வாகனத்தை வாங்கும் கனவும் இதில் ஒன்று என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து மே 2ம் தேதி வரையிலான காலகட்டம், கனவுகளை நிஜமாக்கி கொள்வதற்கு சிறந்த நேரமாம். இந்த சமயத்தில் புதிய வாகனங்களை வாங்கினால், வாழ்க்கையில் நல்லது நடக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

அதே போல் வரும் ஜூன் மாத மைய பகுதி மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய வாகனங்களை வாங்கினாலும், கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிக்கும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.