உலகில் மிக அபாயகரமான கொடிய போதைப்பொருள் மீட்பு!

#drugs #Drug shortage #Police #Arrest #Lanka4
kaniat day ago

உலகின் அதி அபாயகரமான போதைப்பொருள் என்று கருதப்படும்94 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் பருத்தித்துறையில் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தப்பியோடியுள்ள நிலையில், அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.