A எழுத்தின் குணாதிசயங்கள்

#people #Letters #Characteristics
Prasu
2 weeks ago
A எழுத்தின் குணாதிசயங்கள்

எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அந்த வகையில் தமிழில் அ, ஆ போன்ற பெயர்கள் 'A' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும். அப்படி A என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் கொண்டவர்களுக்கு எப்படிப்பட்ட ஆளுமையுடையவர்களாக இருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.

ஆளுமைகளும் பண்புகளும் A என்ற எழுத்து பொதுவாக நாம் பார்க்க கோபுரம் அல்லது பிரமிடு போன்று காட்சி தருவதை உணரலாம்.

images/content-image/1713305403.jpg

விசேட பண்புகள்

  • இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதோடு, வாழ்க்கையில் ஒரு குறிக்கோளைக் கொண்டவராகவும், அதை அடைய உழைப்பவராகவும் இருப்பார்கள்.
  • ஒரு விதிமுறையை வகித்துக் கொண்டு தான் எதை அடைய வேண்டும் என்று நினைக்கின்றார்களோ அதை நோக்கி ஓடுவார்கள். அதை அடையும் வரை எந்த ஒரு கவன சிதறலும் பெரும்பாலும் இருக்காது. 
  • இவர்களில் பெரும்பாலானோர் எந்த ஒரு ஆலோசனை அல்லது விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்களாக உணரும் போது தான் அதை மற்றிக் கொள்ள நினைப்பார்கள்.அல்லது ஆலோசனையைக் கேட்பார்கள். 

images/content-imagemeta/1713305418.jpg

  • அதுமட்டுமல்லாமல் தங்களின் திறமையை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்றும், எந்த ஒரு இடத்திலும் தான் முன்னிலை வகிக்க வேண்டும் என நினைப்பார்கள்.
  • மரியாதையை அதிகம் விரும்புவார்கள். ஒரு நபருக்கு A என்ற எழுத்தில் பெயர் வைப்பது மட்டுமல்லாமல், ஒரு நிறுவனத்திற்கு A என்ற எழுத்தில் பெயர் வைத்தால் நல்ல வெற்றியும், முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கும்.
  • A என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் வைத்திருக்கும் ஆண்கள் நல்ல ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். 
  • மற்றவர்களை ஆளக்கூடிய, அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுவார்கள்.
  • எழுத்துக்களில் முதலாவதாக இருப்பது போல வெற்றியிலும் முதலிடத்தில் இருப்பார்கள். 
  • சமூகத்தில் மதிப்புடன், அதிக நண்பர்கள் கொண்டிருந்தாலும், சில நண்பர்களிடம் மட்டும் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.