IPL - குஜராத் அணிக்கு 225 ஓட்டங்கள் இலக்கு

#India #Delhi #IPL #T20 #Cricket #Gujarat
Prasu
1 week ago
IPL - குஜராத் அணிக்கு 225 ஓட்டங்கள் இலக்கு

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 

இதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜேக் மெக்கர்க் , பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். 

தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்த நிலையில் மெக்கர்க் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் பிரித்வி ஷா 11 ரன்களில் வெளியேறினார். 

தொடர்ந்து ஷாய் ஹோப் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அக்சர் படேல் , ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து நிலைத்து ஆடினர்.பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அக்சர் படேல் , ரிஷப் பண்ட் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 

பின்னர் அக்சர் படேல் 43 பந்துகளில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடி காட்டினார். 

 இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் 88 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 225ரன்கள் இலக்குடன் குஜராத் அணி விளையாடுகிறது.